பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. ஆன்மா அடையும் பயன்கள் ஆன்மா அடையும் பயன்களாக தர்மம், அர்த்தம், காமம், ஆன்மாநுபவம், பகவதநுபவம் என்னும் ஐந்து பேசப்பெறுகின்றன. இவற்றையும் விளக்குவோம். 1. தர்மம்: தர்மம் என்மது அறச் செயல்களாகும். வீடு தோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்னன ஊர்கள் நகர்ங் ளெங்கும் பலபல பள்ளி இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய தீர்த்தங்கள் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிரம் காட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்' என்பன போன்ற அறச்செயல்களைச் செய்வித்தலாகும். இவை பிராணிகட்கும் ஏழைக்களுக்கும் பிறர்க்கும் . பயன் படுவனவாகும். 2. அர்த்தம்: வடமொழிச் சொல்; பொருளைக் குறிக் கும். ஒருவர் தாம் மேற்கொள்ளும் தொழில்களில் நியாய வழிகளில் பொருளைத் திரட்டுதல் வேண்டும். 1. பா. க. தோ. பா. வெள்ளைத் தாமரை 6,9.