பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

13

களில் இத்தகைய அக்கிரமங்கள் நடந்தனவென்பது தெரியவில்லையா? முதலமைச்சர் நன்கு ஆராய்ந்து இன்றைய ரிக்கார்டுகள் மூலம் 88 கோயில்களிலே திருட்டு நடைபெற்றிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார். இன்னும் அவரது கண்ணுக்கு வராதன எத்தனையோ! மறைக்கப்பட்டவை எத்தனையோ! யாம் அறியோம்.

நான் இருப்பது காஞ்சீபுரம் என்பது உங்களிலே பலருக்குத் தெரியும். அங்குள்ள பெரிய சிவாலயமாகிய ஏகாம்பரநாதர் கோயிலிலே, ரிஷப தேவர் வாகனத்திலே, சிவனார் புறப்பட இருந்த சமயம், திடீரென்று, ரிஷப வாகனத்தின் வால் இருக்கிறதே, அந்த வாலில் இருந்த கற்றையாகிய வெள்ளியை யாரோ களவாடிக்கொண்டு போய்விட்டார்கள். காவல், போலீஸ் எல்லாம் இருக்கத் தான்செய்தது; ஆனால், திருட்டும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. சிவனார் கோயிலில் மட்டும்தான் திருட்டு என்று எண்ணிவிடாதீர்கள். வைணவர்கள் கோயிலிலும் திருட்டு நடைபெறுகிறது. காஞ்சீபுரத்திலேயே உள்ள பெரிய வைணவக் கோயிலாகிய வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்னை பிரபல வக்கீல் V. V. சீநிவாச ஐயங்கார் ஒரு டிரஸ்டி.

அவர், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன், வரதராஜப் பெருமாளுக்கு வைரத்தினால் வெள்ளை காமமும், செம்பினால் சிகப்பு நாமமும் செய்து அளித்தார். பெருமாளின் நெற்றியிலே, அது அணியப்பட்டிருந்தது. பக்தர்கள் அதைப் பார்த்துப்பார்த்துப் பூரித்தார்கள். ஒரு பாகவதர் அந்நாமம் நம்மிடத்திலிருந்தால் நம்முடைய வறுமை யெல்லாம் நீங்கிவிடுமே! வைரக்கற்கள் நமது திருமகளின் திருகுபில்லைக்கு ஏற்ற கற்களாகுமே! ஆண்டவனின் பிள்ளை தானே நாம்! தகப்பனாரின் சொத்து பிள்ளைக்குத்