பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அறநிலையங்கள்

தானே பாத்தியம்! என்று இவ்வாறெல்லாம் எண்ணி இருப்பார். அவர், ஒருநாள் நடு இரவில் மதிற்சுவரேறிக் குதித்து உள்ளே சென்றார். வரதராஜப் பெருமானின் நெற்றியிலே கையை வைத்தார். உடனே நாமத்தை அபகரித்துக்கொண்டு போய்விட்டார். இதுபோன்ற திருட்டுக்கள் பல இடங்களிலே நடைபெறுகின்றன.

வைரம் எவ்வளவு? பச்சை எவ்வளவு? முத்து எவ்வளவு? நவரத்தினங்கள் எவ்வளவு? ஜடபில்லைகள் எத்தனை? என்று இந்த மசோதா வந்ததும், இந்துமத் பரிபாலனக் கமிட்டி கணக்குக்கேட்கும். அதற்குத்தான் இந்த மசோதா. கோயில்களிலே அற்புதமாக நடைபெறும் திருட்டை அடியோடு ஒழிக்க, இம்மசோதா பெருந்துணை செய்கிறது. இதில் என்ன தவறு? இதில் என்ன குற்றம்? இதை, வரதாச்சாரியும் வைத்தியநாத ஐயரும் எதிர்ப்பானேன்?

வைத்தியநாத ஐயர் நல்ல சட்டம் தெரிந்தவர். மதுரை வட்டாரத்திலே செல்வாக்கு வாய்ந்தவர். ஆஸ்ட்ரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே சட்டம் எப்படிக் கையாளப்படுகிறது என்பதை நன்கு ஆராய்ந்தவர். அட்லாண்டிக் சமுத்திரத்திலே எப்படி எப்படி அரண் அமைக்கமுடியும்? என்பதையெல்லாம் நன்கு தெரிந்தவர். கேவலம் ஆகமத்திற்காக அவர் புத்திக் கூர்மையைச் செலவழிப்பதா?

”இந்த மசோதா வந்து பின்னர், நம்மவருக்குப் பிடிக்காத இன்னும் பல சீர்திருத்தங்களையெல்லாம் செய்வார்கள். அதனால் நம்மவர்களுடைய ஆதிக்கத்திற்கு அபாயம் நேரிடும். ஆகவே இப்பொழுதே “ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" போட்டது போல, நாமமும் போட்டு, இம்மசோதா சட்டமாகாதபடி