பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

17

நன்றாக நடைபெறும். பணம், சில இடங்களிலே முடங்கி விட்டால், வியாபாரம் சரிவர நடைபெறாது.

பாங்கியிலே, ஒரு ஆயிரம் ரூபாய் வீணாக முடங்கிக் கிடப்பதைவிட, அதே பணத்தைக் கொண்டு, ஒரு 5000-ம் ரூபாய்க்கு சரக்கு எடுத்து, அதனால் லாபம் சம்பாதிக்கத்தான் வியாபாரிகளாகிய நீங்கள் எண்ணுவீர்கள். அப்பொழுதுதான் பணம் முடக்கமின்றிப் பொருளாதாரம் பெருகும். அதேபோல், நம் நாட்டில் பல கோயில்களிலே லட்சக்கணக்கான ரூபாய்கள், நகைகளாகவும், நிலங்களாகவும், வாகனங்களாகவும், கிரீடங்களாகவும், மக்களுக்கு ஒருசிறிதும் பிரயோசனமில்லாமல் முடங்கிக்கிடப்பதை எடுத்து, பல ஆலைகளையும், தொழிற் சாலைகளையும் ஏற்படுத்தலாமே! இந்தியாவில் வாழும் 40 கோடி மக்களும் வேலைசெய்து பிழைக்கலாமே! நாட்டின் பொருளாதார வளமும் பெருகுமே! வேலை யில்லாத் திண்டாட்டம் ஒழியுமே!

அமெரிக்கா செல்வபுரியல்லவா! அமெரிக்காவிலே ஏசுநாதருக்கு, தங்கத் தேர் செய்ய: முடியாதா? இத்தாலியிலே முடியாதா? இதுவரை நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் நினைத்தால் ஏசுநாதருக்கு வைர கருட வாகனம் செய்யமுடியாதா? செல்வமில்லையா அவர்கள் நாட்டில்! நம் நாட்டிலேதான் தங்கத்திலே கருட வாகனங்கள், தங்க யானைகள், வெள்ளி ரிஷபங்கள், எல்லாம்! பல கோயில்களில் வைரமாக, முத்தாக பச்சையாக, நவரத்தினங்களாக நகைகள் இழைத்து வைத்திருக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தார், இந்தியாவை அடமானம் வைத்து, உலக பாங்கியிலிருந்து கடன் வாங்கப் போகிறார்கள். அதற்காக, அமெரிக்காவிலிருக்கும் சர்வதேச பாங்கியிலிருந்து பொரு