பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அறநிலையங்கள்

ளாதார நிபுணர்கள் வந்தார்கள். அவர்களிடம் ஓடுகிற காவிரியைக் காட்டியும், கோதாவிரியைக் காட்டியும், விண்ணை இடிக்கும் இமயத்து உச்சியைக் காட்டியும், விந்திய மலையைக் காட்டியும், காட்டைக் காட்டியும், நாட்டைக் காட்டியும், நாட்டின் வளத்தைக் காட்டியும், சர்க்கார் கடன் கேட்டிருக்கிறார்கள். உலக பாங்குகளிலே கடன் வாங்கக்கூடிய நிலையில், நம் இந்திய சர்க்கார் இருக்கிறது.

கோயில்களிலோ கோடிக்கணக்கான ரூபாய்கள் நகைகளில் முடங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் அரிசியின்றி அல்லற்படும்பொழுது, நூற்றுக் கணக்கான மூட்டைகளைப் பதுக்கிவைப்பதையும், கள்ளமார்க்கட்டில் விற்பதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாட்டிலே, பணமின்றி வறுமை தாண்டவமாடும்போது, கோயில்களிலே பல கோடி ரூபாய்கள் கடவுளின் பெயரால் பதுக்கிவைத்திருப்பதும், ஒருவிதக் கள்ளமார்க்கட் அல்லவா?

நியாயத்துக்கும், அறிவுக்கும், சட்டத்துக்கும், மனிதத் தன்மைக்கும் கட்டுப்பட்டவர்கள், அப்படிச் செய்வார்களா?

உயிருள்ள பாம்பின்மேல் படுத்துக்கொண்டு, கடலிலே அறிதுயில் செய்யும் மகாவிஷ்ணுவுக்கு வாகனமேன்? சிவனார் புலித்தோல் தவிர, எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை என்கிறார். அப்படியிருக்க, சிவனாருக்கு வாகனமேன்? தங்க யானையேன்? வெள்ளி ரிஷபமேன்? இரவிலே வெள்ளி ரதம் புறப்படுகிற தென்றால், தீவட்டிப் பிடிப்பவர்கள் தேவைப்படுகின்றனர். திருட்டு நடைபெறாமல் இருப்பதற்காகப் போலீஸ். போலீஸ்காரர்களை மேற்பார்வையிட மேல் அதிகாரி