பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அறநிலையங்கள்

கோயில்களிலே முடங்கிக்கிடக்கும் பணத்தை, நல்ல வழிகளில் பயன்படுத்தினால், எவ்வளவோ புதிய தொழில் களை உண்டாக்கலாமே!

வியாபாரிகளாகிய நீங்கள், ஒரு கடையிலே, 15 வயதுடைய பையன் தேவை என்று, ஒரு போர்டு எழுதிப் போட்டுப் பாருங்கள்! மறுநாளே, ஆயிரக்கணக்கான பையன்கள் வந்து, வேலைக்காக நிற்பார்கள்! அவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கிறது - வேலையில்லாத் திண்டாட்டம். தொழில் வளம் குன்றியிருக்கும் நாட்டில் பொருளாதார ஞானம் சூனியமாய் இருக்கும் இந்த நாட்டில், புதிய தொழில்களை ஆரம்பித்தால், எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும்? சிந்தியுங்கள்.

வேலையில்லாத் திண்டாட்டத்தால், பலர் வாடிய போது, இதற்கெல்லாம் காரணம் - வெள்ளையர்கள் தான் என்றோம். முன்பு, ஒரு பகையாளி இருந்தான்; எதற்கும் கரம் அவனைச் சுட்டிக்காட்டி வந்தோம். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பிறகும், நாம், இப்படி பழி சுமத்த முடியுமா? முடியாது. குற்றம், வெள்ளையரிடமல்ல, நம் அரசாங்கத்தாரிடமே இருக்கிறது.

நம் நாட்டிலே, இப்பொழுது இரும்பு கிடைக்கிறது. கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா? அந்த இரும்பைக் கொண்டு, நல்ல தொழிற்சாலைகள் பல ஏற்படுத்த வேண்டும். தங்கம்கூட நம் நாட்டில் கிடைக்கிறது. அதையும், நல்லவழியில் பயன்படுத்தவேண்டும். மேல் நாட்டிலிருந்து, இயந்திர்ங்கள் பல தருவிக்க வேண்டும். இங்கேயே - பாரதியார் விரும்பியபடி - இரும்பைக் காய்ச்சி நல்ல ஆயுதங்களைச் நமக்கு வேண்டிய செய்யலாமே!