பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

21


இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!

யந்திரங்கள் வடித்திடுவீரே!"

-- என்று சொன்னார் பாரதியார். நாற்பதுகோடி மக்களும் நலமுடன் வாழ வழிதேடவேண்டாமா?

சுயராஜ்யம் கேட்டாயே தம்பீ! என்ன பலன் கண்டாய்? என்று நம்மைநோக்கி, சிலோன் சிரித்துக் கொண்டே கேட்க இருக்கிறது! மலேயா மருட்சியுடன் கேட்க இருக்கிறது! செக்கோ மாதும், அமெரிக்க அணங்கும், ஏன்? அகில உலகமும், நம்மை நோக்கி, உங்கள் நாட்டிலே வறுமை போய்விட்டதா? இந்தியா, பழையபடி வளமுள்ள நாடாக ஆகிவிட்டதா? என்று கேட்கத் தயாராக இருக்கின்றன.

ராஜேந்திரன், குலோத்துங்கன் போன்ற தமிழ் மன்னர்களெல்லாம், மக்கள் வெளிநாடுகளிலே வியாபாரம் செய்து, தாங்கள் பெற்ற லாபத்திலே அளித்த பொருளைக் கொண்டு, கோயில்களைக் கட்டினார்கள். கோயில்களிலே, எத்தனை ஆயிரம் பேர் வேலைசெய்திருப்பார்கள் ? வெய்யிலிலும் மழையிலும், எவ்வளவு தொழிலாளர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள்? தஞ்சாவூரிலே மலையே இல்லை! எவ்வளவு காததூரம் கடந்து, வெய்யோன் ஒளியில் கஷ்டப்பட்டுப் பாறைகளையும், கருங்கற்களையும் சேகரித்திருப்பார்கள்? எவ்வளவு பவுன்களைப் போட்டிருப் பார்கள்? எவ்வளவு சிற்பிகள், இரவு பகலென உழைத்திருப்பார்கள்?

நம் நாட்டிலே, பக்தர்கள் பணத்தையெல்லாம் கோயில்களிலே பக்தி பாங்கில் ஏராளமாகப் போட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள பாங்குகளில் செக், கியாஷ் ஆகாவிட்டால், பாங்க் நம்மை, மோசடி செய்ததாக எண்ணுகிறோம்; கியாஷியர் (Cashier) மீது சீறுகிறோம்.