பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநிலையங்கள்


அன்புள்ள தலைவர் அவர்களே, தோழர்களே!

இந்த வட்டாரத்தில் இக்கூட்டம் கூட்டப்பட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வியாபாரிகள். ஆகவே, இந்தப் பக்கத்திலே உங்களிடையில் கெட்டுப்போன சரக்கை, எவரும் வந்து விற்றுவிட்டுப் போய்விட முடியாது. ஒருவன் கொண்டுவந்த சரக்கை நிறுத்துப்பார்த்து, அது வியாபாரத்திற்குத் தேவையுள் ளதுதானா என்று பார்த்துத்தான் அதை வாங்குகிறீர்கள். அதைப் போலவே, உங்களிடையே வந்து பேசப்படுபவைகள், உங்கள் காதுகளில் கேட்பவை அனைத்தையும் நீங்கள் நிறுத்துப்பார்த்து, சரியானவைகளை ஏற்க வேண்டும். பொதுவாக காங்கிரஸ்காரர்கள் எதைச் சொன்னாலும், திராவிடக் கழகத்தாராகிய நாங்கள் எதிர்ப்பவர்கள் என்ற தப்பபிப்பிராயம், ஒரு சிலரிடையே பரவியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். எந்தக் காரியத்தையும், எந்தச் சட்டத்தையும், சீர்திருத்த நோக்குடைய காங்கள் எதிர்ப்போம் என்று சொல்வது தவறாகும்.