பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அறநூல் தந்த அறிவாளர்


குருபரர் குட்டித் திருஞானசம்பந்தர்

பெற்றோருடன் முருகப்பெருமானை வழி போட்டு நின்ற குமரகுருபரர் உளம் உருகிப் பாடத் தொடங்கினார். துள்ளல் ஓசையுடைய வெள்ளைப் பாவால் உள்ளங் குளிரப் பாடி வழிபட்டார். அவர் தம் ஐந்தாண்டுப் பருவத்தில் வாய் திறந்து பேசத் தொடங்கியதும், அருள் செய்த முருகனுக்கே பாமாலை சூட்டினர். அதுவே ‘கந்தர் கலிவெண்பா’ என்னும் செந்தமிழ்ச் சிறுநூல் ஆகும். இச்சிறுநூல் திருவருள் நலம் வாய்ந்தது ஆகும். சிறுவர்கள் இதனை நாள்தோறும் ஓதுவதால் சிறந்த கல்வி நலம் பெறுவர்; அரிய தமிழ் அறிவைப் பெறுவர். இவ்வாறு ஐந்தாண்டுப் பருவத்தில் குமரகுருபரர் முருகன் திருவருளைப் பெற்றார். அதனால் தம் ஊமைத் தன்மை நீங்கி உயர்ந்த கலைஞானம் கைவரப் பெற்றார். முருகன் மீது பாமாலை தொடுக்கும் பைந்தமிழ்ப் புலமையும் பெற்றார். ஆதலின் இவரைக் ‘குட்டித் திருஞானசம்பந்தர்’ என்று சைவர்கள் கொண்டாடுவர்.

குட்டிக் கந்த புராணம்

இவர் முதன்முதல் பாடிய கந்தர் கலிவெண்பா மிகவும் அருமையானதொரு சிறுநூல் ஆகும். முருகப்பெருமான் வரலாற்றைக்