பக்கம்:அறநெறி.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. விவேகானந்தர் சிந்தனைகள்

I

‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்; இதை நன்றே நினைமின்” என்பது தவயோகியாம் திருமூலர் வாக்கு. அவருக்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்னே கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறி உலகம் அனைத்தையும் ஒரு குடும்ப மாகக் கண்டார். இந்த மண்ணிற் பிறந்த ஆன்றோர் களும் சான்றோர்களும் வழிவழியாக இக் கருத்தினையே வலியுறுத்திவந்தனர். நாயன்மார்களும் ஆழ்வார்களும் சமய வளர்ச்சியில் கருத்துான்றியவர்களாக இருந்தாலும் சாதிச் சார்பினை அவர்கள் விளைவிக்கவில்லை. “சாதியெனும் குழியிற் அல்லற்பட்டுத் தடுமாறும் ஆகமிலி நாயேன்” என்றும்கூட அருளாளர் ஒருவர் கசிந்துருகி நின்றார்.

சென்ற நூற்றாண்டிற் பிறந்து இந்த நூற்றாண்டில் நூற்றாண்டு விழா கண்டு கொண்டிருக்கும் மகாகவி பாரதியாரும் ‘சாதிச் சண்டைகள் வேண்டாம்; அன்பு தன்னிற் செழித்திடும் வையம்’ என்று பாடினார். மேலும் அவர், ‘ வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் மானிடர் வேற்றுமை இல்லை’ என்று பாடினார்.

இவ்வாறு தொடர்ந்து அருளாளர்களும் கவிஞர் பெருமக்களும் ‘சாதி இல்லை; சாதி இல்லை; மக்கள் அனைவரும் ஒன்றே; மனித சமுதாயம் அனைத்தும் ஒரு குடும்பமே” என்று காலந்தோறும் கூறிவந்தாலும் இந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/101&oldid=586836" இருந்து மீள்விக்கப்பட்டது