உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறநெறி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

17


இடம். புகழ் பூத்த புலவர்கள் வாழ்ந்த திருவிடம். மதுரையில் அந்நாளில் மருதன் இளநாகனார் என்னும் புலவர் வாழ்ந்து வந்தார் அவர் முற்றிய புலமை ப்ாளர். சான்றாண்மைக்கு ஆழி என விளங்கிய அறவோர். புரவலர் தம் புகழ்மிகு செயல்களை வடியாநாவிற் வடித்துப் பாடியவர். அவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் வேந்தனைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது பாடாண்திணையில் செவியறிவுறு உத் துறையில் அமைந்த அப்பாடல் அறிநெறி இதுவெனத் தெற்றென விள க் கி க் காட்டுகின்றது. அரசர்க்கு உணர்த்திய அறநெறியேயாயினும் அஃது அனைவரும் எண்ணிப் பார்த்துப் பின்பற்ற வேண்டிய அறநெறியாகத் துலங்குகின்றது.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்குமிவ் வுலகு (389)



என்பார் திருவள்ளுவர். பாண்டியன் நன்மாறனின் செவி கைப்ப மதுரை மருதன் இளநாகனார் பாடிய பாடலாகப் புறநானூற்றுப் பாட்டு துலங்கக் காணலாம்.


பாண்டியன் நன்மாறன் மூவெயில் எய்து அழித்த சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போலப் பிற வேந்தரினும் மேம்பட்டு விளங்குகின்றான். போர்க் களத்தில் எதிரிகளைக் கொல்லும் களிறுகளையும்; விரைந்து செல்லும் குதிரைகளையும், கொடி பறக்கும் தேர்களையும், கூற்று உடன்று வரினும் எதிர்த்துப் போர் புரிய அஞ்சாத போர் மறவர்களையும் உடைய வேந்தனாய் உள்ளான். ஆயினும் அவனுக்குப் பெருமை சேர்ப்பன இவை மட்டுமன்று: அறநெறியை முதலாக அடையவன் அரசன் என்னும் சிறப்பே அரசனின் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/19&oldid=1685288" இலிருந்து மீள்விக்கப்பட்டது