பக்கம்:அறநெறி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

go. Lyss- 49

நெறிக்கண் சென்றால், அவ்வாறு செல்ல விடாமல் ஆட்க்கிப் பணிவுடையனாக அமைதல் மனிதனுக்கு வேண்டிய மாறாத பண்புகளாகும்.

ஒருவன் அடக்கமாக இருந்தால் அமரர் உலகையும் அடையலாம்; அடங்காதவனாக இருந்தால் அன்ை நரகருலகுதான் செல்லவேண்டும். இந்தப் பிறவியில் அடக்கமாக வாழ்ந்து புகழ் பெற்றால் உறுதியாக உயர் நிலையை அடையலாம் என்று அறநெறிச்சாரம் குறிப்பிடு கின்றது.

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி உம்மை உயர்கதிக் குய்த்தலான்

-அறநெறி : 43.

எனவே உயிர்களுக்கு அடக்கத்தைக் காட்டிலும் பெரிய செல்வம் இல்லை. ஆதலால் அந்த அடக்கத்தை வாழ்க்கை யின் உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க வேண்டும் என்று திருவ்ஸ்ளுவர் வற்புறுத்துகின்றார்.

செல்வம் உடையார் உலகில் தருக்கித் திரிவது இயற்கை யான் ஈட்டிய செல்வம் ஏழு தலைமுறை களுக்கும் வரும் என்று கூறி, அடங்காமல் ஆர்ப்பரிப்பர் செல்வர். அத்தகைய செல்வர் பணிந்தே போக வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். எல்லாருக்கும் பணிவுடைமை என்கிற பண்பு வேண்டப்படுவதே என்றாலுங்கூடப் பணக்காரர்களுக்குஅப்பண்பு கட்டாயம்தேவை என்கிறார் வள்ளுவர். ஏனெனில் தாங்கள் ஈட்டிய பொருளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அப்பணிவுடைமை துணை நிற்கும் என்கிறார். செல்வரிக்கே அமையும் மற்றொரு செல்வம் பணிவுடைமை என்றும் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/51&oldid=586932" இலிருந்து மீள்விக்கப்பட்டது