பக்கம்:அறநெறி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அறநெறி

“ஒட்டகம் ஊசி முனையில் நுழைந்தாலும் நுழைய லாம்; ஆனால் பணக்காரன் பரமண்டலத்தில் நுழைய முடியாது” என்பதாக விவிலியம் கூறும். பொறுமைக்கும் அன்பிற்கும் அடக்கத்திற்கும் அருளிற்கும் ஒரு நிலைக்களனாகத் திகழ்ந்த ஏசுபெருமான் ஏழைகளுக்கே மோட்சவுலகம் என்று தம் மலைப்பொழிவில் பொழிந்த தாகக் கூறுவர்.

Blessed are the poor in spirit, for theirs is the Kingdom of heaven

-Matt; 5 : 3 Blessed are the meek for they shall inherit the earth Matt; 5 : 5

திருநாவுக்கரசர் பெ ரு மா ன் வாழ்க்கையினை அடக்கத்திற்கோர் எடுத்துக்காட்டாய்க் கொள்ளலாம். திருஞான சம்பந்தர் சிவிகையில் திருப்பூந்துருத்தி நோக்கி வருகிறார். ஊரின் மருங்கே அவர் வரவ்ை நோக்கிக் காத்திருக்கும் அவரினும் வயதும் அனுபவமும் மிக்க திருநாவுக்கரசர் காத்து நிற்கிறார். சிவிகையைக் கண்ட மாத்திரத்தில் அதைத் தாங்கும் ஒர் அடியாராகத் தம்மை மாற்றிக் கொள்கிறார். திருப்பூந்துருத்தியருகில் திருஞான சம்பந்தக் குழந்தை, “எங்குற்றார் அப்பர்?’ என்கிறது. “உம் அடியேன்: ‘உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு வந்தெய்தப் பெற்று இங்குற்றேன்’ என்கிறார் ஆளுடைய அரசு. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வாக்கிற்குச் சொந்தக்காரர் அல்லவா அப்பர் பெருமான். அவர் அடக்கத்தின் எல்லையாகத் திகழ்ந்த திறத்தினை அவர் வாழ்விற் கண்டோம். இந்த அடக்கமுடைமை என்னும் செல்வமே, மகேந்திர வர்ம பல்லவனால் இங்கு வந்துற்றபொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/52&oldid=586934" இலிருந்து மீள்விக்கப்பட்டது