பக்கம்:அறநெறி.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 85

முன் தம் உணவில் ஒரு படியாவது பசித்திருப்பவருக்குத் தந்து உதவவேண்டும். நான்காவதாக, மேற்கூறிய மூன்று செயல்களைச் செய்ய இயலாமற்போனாலும் பிறரோடு பேசும்பொழுது இன்மொழிகளையே பேசவேண்டும் என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். இந் நான்கு நல்ல கருத்துகளையும் உள்ளடக்கித் திருமூலர் உலகிற்குத் தந்த திருமந்திரப் பாடல் வாழ்க்கைத் தெளிவினை வகையுறக் காட்டுகிறது.

யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே -திருமந்திரம்

- திருமூலர் நெறியினைப் பின்பற்றி ஒழுக முனைவோர் இப் பாடலின் சாரத்தினை முற்றும் பின்பற்ற உறுதிபூண வேண்டும். ஏனெனில் உண்ண உணவு வழங்க இயலா விடினும் இறைவன் படைத்த நாவினைக் கொண்டு எளிதாக இன்சொல்லாவது பிறருக்கு வழங்கலாமன்றோ? இச்சீரிய கருத்தினையே மகாகவி பாரதியாரும்,

நிதி மிகுந்தவர் பொருட்குவை தாரீர்

நிதி குறைந்தவர் காசுகள் நல்குவீர்

அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளுவீர்

என்றார்.

பசி என்று வந்தவர்க்குப் புசி என ஒரு பிடி கொடுத்துப் பாரப்பா என்று பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதனையும் ஒப்ப நோக்க வேண்டும்.

ஆ.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/87&oldid=586991" இருந்து மீள்விக்கப்பட்டது