பக்கம்:அறநெறி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GN.Lunf. 7

மனிதநேேேம பண்பாட்டின் உயிர்காடி

நமக்கென்று ஒர் ஈடுபாடு, ஆர்வம் இருக்கின்றது. அந்தத் துறையில் ஆழ்ந்த கல்வியும் பயிற்சியும் பெற்று சிறப்பு வல்லுநர் ஆகலாம். துறையறிவோடுகூட உலகியல் அறிவு முழுமைபெறவும் மற்றவர்களோடு கலந்துபேசி உள்ளம் மகிழவும் பழகிக்கொள்ளவேண்டும். இல்லையேல் இந்தப் பெரிய உலகம், பட்டப்பகலிலும் ஒரே இருட்டாகத் தோன்றும். அக் கருத்தைத்தான் செந்நாப் புலவராம் திருவள்ளுவர்.

“நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள் (குறள். 999) என வலியுறுத்துகின்றார்.

“சமுதாய நல்லொழுக்கம் சீர்குலைந்துவிட்டது, நடுவுநிலைமை, நியாய உணர்வு, நீதிநெறி, நாவடக்கம் எல்லாம் தேய்ந்து மாய்ந்துக் கிடக்கின்றன! என்று பன்னிப் பன்னிப் பேசுவதாலோ, எழுதுவதாலோ. எதிர்பார்க்கும் பயன் பெரிதும் விளைந்துவிடாது, நடக்கும் சாலையிலே ஒருவருக்கு விபத்து நடந்து வீழ்ந்து கிடக்கும்போது எரிகிற வீட்டில் அகப்பட்டது இலாபம் எனச் சுருட்டிக் கொண்டு ஒடும் பான்மையில், அருகே சிதறிக் கிடப்பதைக் கவர்ந்துகொண்டு நடக்க முயலும் விட்டேற்றி மனப்பான்மை மாறத்தான் வேண்டும். இது சமுதாயச் சீர்குலைவு, மனிதநேயச் சிதைவு; ஒளிமயமான ஒரு நல்ல சமுதாயம் எதிர்காலத்தில் மலர நம்மால் ஆன வகையில் வாழ்ந்தே தீருவது என்று முடிவெடுத்து வாழத் தலைப்பட இன்றைய நாளையே தொடக்க நாளாகக் கொள்ளலாம். கண்டும்காணாமல் போகின்ற போக்கு எல்லாநிலைகளிலும் ஏற்புடையதன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/9&oldid=586995" இலிருந்து மீள்விக்கப்பட்டது