பக்கம்:அறநெறி.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8& அறநெறி

வருகிறது என்று சொன்னால் தன் உயிரையே தந்து, அதே நேரத்தில் பழி என்று சொன்னால் உலகத்தையே பெறுவ தாக இருந்தாலும் அது வேண்டா என்று ஒதுக்கி, வாழ்நாள் முழுதும் தமக்கு என்று இல்லாமல் பிறர்க்கு என்று வாழும் பெருமனம் உடையவர்களாக-கொடை மனம் கொண்டவர்களாக உலகில் பலர் வாழ்ந்துகொண்டு இருக்கின்ற காரணத்தினால் இந்த உலகம் நாள்தோறும் இயங்கிக்கொண்டு இருக்கின்றது என்ற ஒர் அரிய உண்மை யினைத் தன்னுடைய வினாவின் பயனாக விடை கண்டான்: ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்த மண்ணில் வாழ்ந்த ஒரு மன்னன். அவனுடைய பெயர் ‘கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று புறநானுாறு புகலு கின்றது.

“உண்டா லம்மஇவ் வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்: துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்! அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா கோன்றாள் பிறர்க்கென முயலுகர் உண்மை யானே’

-புறநானூறு : 182

அரியதொரு நெல்லிக் கணியைப் பெற்ற வள்ளல் அதியமான் அந்த நெல்லிக் கணியைத் தான் உண்டு பன்னெடுங்காலம் வாழவேண்டும் என்று எண்ணாமல், தான் வாழ்வதைவிட அறிவில் சிறந்த ஒளவைப் பிராட்டி உண்டால்-அவள் பன்னெடுங்காலம் வாழ்ந்தால், அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/90&oldid=586997" இருந்து மீள்விக்கப்பட்டது