பக்கம்:அறநெறி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sł. raff. 97

என்ற பாடலில் காக்கை, குருவி தன்னுடைய இனம் என்று பாரதி குறிப்பிடுவதோடு, கடலும், மலையும்கூட தன் னுடைய உறவினர்கள் என்றும் குறிப்பிடக் காணலாம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனாரின் கருத்தும் இங்கு நினைக்கத்தக்கதாகும். மனிதர்களன்றி, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் முதலியவற்றைக்கூடத் தம் உயிர்போல் எண்ணி வாழுகின்ற இனம் தமிழ் இனம் என்பதனைப் பழந்தமிழ் இலக்கியங்கள் தெள்ளெனத் தெளிவுபடுத்தியுள்ளன.

இரண்டாவதாக, தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும் என்று பாரதி முழங்குகின்றார். தெய்வம் உண்டென்று இரு; ஒன்றென்று இரு என்று பெரியோர் கூறுவர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் இதை நன்றே நினைமின் என்று தவயோகியாம் திருமூலர் கூறுவர். தெய்வ நம்பிக்கை ஒரு மனிதனை நன்னெறியில் செலுத்தும் ஆற்றல் வாய்ந்ததாகும். பல்வேறு சமயத்தவர் கள், பல்வேறு வகையில் இறைவனை வெவ்வேறு பெயர் சொல்லி அழைத்தாலும் இப் பெயர்களால் அழைக்கப் பெறுகின்ற தெய்வம் ஒன்றேயாகும். எனவே, அந்த மெய்ப் பொருளை-உண்மைப் பொருளை-உயிர்ப் பொருளைபேரருட் பிழம்பாம் அக் கடவுளை எல்லோரும் வணங்கிடுதல் வேண்டும். கதிரவன் தன்னுடைய ஒளிக் கற்றைகளால் இறைவனை வணங்குகின்றான். பறவைகள் இன்னிசை எழுப்பி வணங்குகின்றன. மரங்கள் பூக்களை இட்டு வழிபடுகின்றன. ஐம்பூதங்கள் தத்தம் தொழில் களைத் தவறாதாற்றித் துதிக்கின்றன. அலைகடல் தன் அரிய முழக்கத்தால் கடவுளை வணங்குகின்றது. அவ்வாறு இருக்க மனித மனம் கடவுளை வணங்கித் துதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றார் மா யூ ர ம் வேதநாயகம் பிள்ளை அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/99&oldid=587010" இலிருந்து மீள்விக்கப்பட்டது