பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

11




பற்றே தாய்நாட்டுப் பற்றென்பதை அவர்கள் தெள்ளிதில் உணர்ந்தே தாய்மொழிக்கு ஆக்கந் தேடினார்கள்.

இந்தி மொழியைத் தமிழ் நாட்டில் கட்டாய பாடமாக கினால் தமிழ்மொழி தன் சிறப்பை இழந்து விடுமென்பதையும், தமிழ் மக்கள் தம் தாய்மொழியாகிய தமிழை மறந்து விடுவார்கள் என்பதையும், நம் தமிழ்ச் சகோதரர்கள் நன்குணர்ந்து தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் ஆக்கந் தேடுவார்களாக! தமிழரையும், தமிழ் மொழியையும் தாழ்த்தும் பொருட்டும், இந்தி பேசும் நாட்டவரையும், இந்தி மொழியையும் உயர்த்தும் பொருட்டும், ஒரு சில சுயநலமிகள் செய்துவரும் சூழ்ச்சிகளை உணராது நம் தமிழ் மக்களிற் பலர் அவற்றை மெய்யெனக்கொண்டு தம்மையும், தம் அருந் தமிழையும் இழிவுபடுத்தி, ஐயகோ! ஏமாந்து போகின்றனரே! இனியேனும் அவர்கள் அப் பொய்ம்மையை உணர்ந்து தமக்கும், தம் தாய்மொழிக்கும் ஆக்கந் தேடுவார்களாக!

இப்போது ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் புகுந்து வாணிகம் முதலிய தொழில் முறைகளினால் பெரும் பொருள் சேர்த்துக் கொண்டுபோவது யாவரும் அறிந்ததே. இந்த நிலைமையில் இந்தியும் பொது மொழியாக மாறிவிட்டால் ஆயிரக்கணக்கானவர்கள் இலட்சக்கணக்காகப் பெருகி வந்து இன்னும் பெரும் ஊதியத்தைப் பெற்றுப்போவதற்கு எளிதாய் இருக்குமென்று நினைக்கிறார்கள் போலும்! ஆம், ஆம்! ஒரு சாரார் நீங்கிவிட்டால், தமிழ் நாட்டவர்கள் வியர்வை வடியத் தேடிய பொருளைக் கவர்ந்து செல்வதற்கு இன்னொரு சாரர் முன் எச்சரிக்கையாகவே "ஆரியக் கூத்தாடி-