பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அறப்போர்



னாலும் காரியத்திலேயே கண்" என்ற பழமொழிப்படி, அதற்குரிய ஏற்பாடுகள் எல்லாம் செய்யவேண்டுமல்லவா? தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்று அறிந்தவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்!

தமிழ் அன்பர்களே! பொன் விலங்கைக் கழற்றி இருப்பு விலங்கை மாட்டிக்கொள்வதுபோல் ஒரு சாராரின் அடிமைத்தனத்தில் நின்றும் விடுபட்டு, இன்னொரு சாராருக்கு அடிமைத்தனமாகும் "பிறப்புரிமை. எங்கள் அடிமைத்தனம்" என்னும் இழிந்த நோக்கத்தை மாற்றி, "நாங்களும் மக்கட் கூட்டத்தவர்தான்--எங்களுக்கும் பகுத்தறிவு இருக்கின்றது.--நாங்களும் பிற நாட்டினரைப் போன்று தனித்து நின்று எங்கள் வாழ்க்கையை நடத்தும் ஆற்றலும், வீரமும் உள்ளவர்கள்தான்--நாங்களும் வடநாட்டில் ஆயிர மன்னரையும் ஒருங்கே கங்கை நதிக்கரையில் புறமுதுகிட்டோடச் செய்த செங்குட்டுவன் பெருமைக்கு உரியதாய் அமைந்த தமிழ் வீரர்தான்" என்ற உயர்ந்த நோக்கத்தோடு கூடிய உணர்ச்சி நரம்புகள் தமிழ்ப்பாலுண்ட உங்கள் உடம்புகளில் ஓடிக்கொண்டிருக்குமாயின், இந்தி மொழியைக் கட்டாயபாடமாக்க வேண்டுமென்று கூச்சலிடுகிறவர்களது சுயநல ஆரவாரத்துக்குத் தக்க அறிவாப்புக் கொடுத்துத் தமிழ்மொழியைக் கட்டாய பாடமாக்கும் பெருஞ்செயலை மேற்கொள்ளுங்கள்! இல்லையேல், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பின் உங்கள் வழித்தோன்றும். தமிழ்ச் சிறார்க்கு மாபெருங்கேடு அடிகோலி வைத்தவர்களாவீர்கள். அவர்கள் "நாங்கள் தமிழரோ அல்லது வேறு இனத்தவரோ" என்று நினைக்கும் நிலைமையில் கலங்குவார்கள்.