பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

13



இப்போது ஆங்கிலம் ஒன்றாலே நமது தமிழ்மொழி எவ்வளவு சீர்குலைந்திருக்கிறதென்பதைப் பாருங்கள்.நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள்கூடத் தாம் பேசும்பொழுது ஆங்கிலச் சொற்களை வலிந்து பொருத்திப் பேசிவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக "இன்று காப்பி (coffee) பஸ்டாய் (first) இருந்தது", "உனக்குக் கொஞ்சங்கூட யுசென்ஸ் (sense) இல்லை", "ப்ளீஸ் (please) ஜானகி இந்தப் பென்சிலை (pencil) மெண்ட் (mend) பண்ணித்தா" என்றெல்லாம் பேசுவது கண்கூடு. இந்த நிலைமையில் இந்தியும் பொதுமொழியாக மாறிவிட்டால், நம் தமிழ்மொழி என்னவாகும் என்பதைச் சற்றே உணர்ந்து பாருங்கள்!