பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

15



விட்டது. திருமண வீட்டு அழைப்புபோல, சென்னைத் தாய்மார்கள், தெருத்தெருவுக்கும் சென்று, செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை!' என்று சிந்து பாடினர். பெரியார் பெரும்படை உருவெடுத்தது.

டாக்டர் தருமாம்பாளம்மையார், மலர்முகத்தம்மையார், பண்டிதை நாராயணியம்மையார், மூவலூர் இராமாமிருதத்தம்மையார், கிளம்பினர்--பவனி வந்தனர், செந்தமிழ்நாட்டில். இவைகள் எல்லாம், கனவில் கண்ட காட்சிகளோ என்று எண்ணிட வேண்டிய விதமாக, ஆண்டு சில சென்று விட்டன. அறப்போர் நடாத்தியதால் கிடைந்த ஆர்வம், அடியோடு மறைந்து போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சம்போலும், அன்பர் அவினாசியாருக்கு ஆகவேதான்--அறப்போருக்கு அழைக்கிறார். இந்தி இஷ்ட பாடந்தான் தமிழகத்தில் என்றார்--அவர்மீது சிலர் சீறினர்-- உடனே அமைச்சர் மாறினார்---இங்கும் இந்தி கட்டாய பாடந்தான் என்று கூறுகிறார்--தமிழரைத் அச்சரென்றெண்ணி, வலிய வம்புக்கு நிற்கிறார். அறப்போர் நடாத்தும்படி அழைக்கும் அவினாசியாருக்கு, அந்த நாள் நிகழ்த்சிகள் அவ்வளவாகத் தெரியாது. ஆச்சாரியார் அறிவார் அனைத்தும்--ஆனால் அவருக்கோ நேரம் இராது, அவனாசியாரிடம் பேச--சீனத் தூதருடன் சிற்றுண்டியும், நேபாளத் தூதருடன் விருந்தும், திபேத்திய கன்னியரின் திரு நடனமும், நிஜாம் தூதருக்குப் பேட்டியும் தரவே, அவருக்கு நேரம் போதாது--நினைப்பிலே திடீர் நடுக்கம் கொள்ளும். அவினாசியாரிடம், பழங்கதை பேச நேரம் எப்படிக் கிடைக்கும்!

விஷயம் தெரியாததாலும், நிலைமை புரியாததாலும்,