பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அறப்போர்



எதனாலே? செத்த வடமொழிக்கு, சிங்காரிப்புகள் நடப்பது எதனாலே? ஆரிய நாகரிகம் அகிலமெல்லாம் பரவுக என்று முன்ஷி கூறியது எதனாலே? ஓமந்தூராரும் ஈரோட்டாரின் கையாள்தான் என்று பித்தர் சிலர் பேசத்தொடங்கியது எதனாலே? சென்னைக் காங்கிரஸ் மந்திரி சபை, காங்கிரசின் கொள்கைக்கே மாறாக நடக்கிறது என்று மேலிடத்துக்குச் சாடி சொல்லச் சிலர் கிளம்பியது எதனாலே?-- இவையாவும், ஒரே காரணத்திலிருந்து கிளம்பும் பலரகமான நிலைமைகள்---அந்தக் காரணம்தான், நாட்டிலே வளர்ந்துள்ள பாசிசம்! பாசிசத்தை நாடாள விட்டு விட்டு, பதுமைகளாக வீடுகளிலே இருப்பதைவிட, சிறைகளில் வாடுவதும், வேலாயுதங்கள் போல மரக்கிளைகளில் தொங்குவதுங்கூட, விடுதலை விரும்பிகளுக்கு மேலானதாகத் தோன்றும். அலினாசியார், இத்தகைய மன எழுச்சியை ஊட்டுகிறார்--அறப்போருக்கு அழைக்கிறார்.

✽✽✽