பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அறப்போர்


 தமிழ்நாடல்லாத வேறெந்த நாட்டிலாவது அவர்களின் தாய்மொழியை நீக்கி வேறொரு அயல் மொழியைக் கட்டாய பாடமாக வைத்துக் கற்பிக்கப்படுகின்றதா? அங்ஙனமாயின் எந்த நாட்டில், எம்மொழி என்பதைத் தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டுக!

இந்தி மொழியை இந்தியா முழுவதுக்கும் பொது மொழியாக்குவதினின்றும் மக்களிடையேயுள்ள பிளவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாக்கும் என்னும் கூற்றுக்கு யாதாயினும் சான்று காட்டி அதனை மெய்ப்பிக்க முடியுமா?

ஒரு மொழியையே பேசும் ஒரு நாட்டவரிடையே பலவகைப்பட்ட பிளவுகளும், சச்சரவுகளும் காணப்படும் நிலைமையில், பல மொழிகளைப்பேசும் பல நாட்டவரையும் ஒரு பொது மொழி கற்பதனால் ஒற்றுமையாக்கி விடலாமென்று கருதிப் பாடுபடுவது "உமி குற்றிக் கை சலித்த பான்மையாக முடியுமல்லது அதனால் யாதும் பயன் விளையுமென்று சொல்ல முடியுமா?

இப்போது ஒரு மொழியையே (ஆங்கிலத்தையே.) பொதுமொழியாக வைத்துப் பேசிவரும் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய மூன்று தீவுகளிலுமுள்ள கலேகாற்கோடி மக்களுள்ளும் பிளவுகளும், சச்சரவுகளும் இல்லாமலா இருக்கிறது?

இந்தியாவில் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பகுதி வினரால் அதாவது 25 கோடி மக்களால் இந்திமொழி பேசப்பட்டு வருகின்ற தென்னுங் கூற்றுக்குத் தக்க ஆதாரங்களுடன் எந்த ஆண்டிலாவது எடுக்கப்பட்ட இந்தி-