பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

5



யக் குடிக்கணக்கின்படி புள்ளி போட்டுக்காட்ட முடியுமா? அல்லது இப்பெரும் பொய்யை மறைக்கும் ஆற்றலாவது எவருக்கேனும் உண்டா?

இப்போது சற்றேறக் குறைய 16 கோடி மக்களாற் பேசப்படுவதும், உலகப் பொதுமொழியெனச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வதும், கடந்த 150 ஆண்டுகளாக. இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா வகை அலுவல் நிலையங்களிலும் வைத்து வழங்கப்பட்டு வருவதும் ஆன ஆங்கில மொழியின் உதவி கொண்டே நம் நாட்டு மக்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி அளவளாவ முடியாத நிலைமையில்--ஒருவர் ஆங்கிலத்தில் பேசினால் அதன் பொருளை அறிந்துகொள்ள முடியாது திகைக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணப்படும் இந்த நிலைமையில்--இனிப் புதிதாக ஒரு பொதுமொழியைக் கற்று அதன் வாயிலாக இந்தியமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அளவளாவி ஒற்றுமையுடன் இனிது வாழலாம் என்று கருதுவது யாங்கஙனம் இயலும்?

நம் இந்திய மக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இந்தி மொழியைக் கற்றுக் கொண்டாலும், அதன் உதவிகொண்டு இப்போதைய நிலையைப் பார்க்கிலும் ஒரு கடுகளவாவது உயர்ந்து செல்ல இடம் உண்டாகுமா? அல்லது இந்தி மொழியில் உயர் நிலையை அடைய வழிகாட்டும் ஏதொரு நூலாவது உண்டா? அங்ஙனம் உளதாயின், அந்நூலின் பெயர்தான் யாதோ?

நமது செந்தமிழ் மொழியின் பழைமை, இளமை, இனிமை முதலிய மேதக்க பெருமைகளையும், அம்மொழியின்கண் மிளிரும் ஒப்புயர்வற்ற விழுமிய கருத்துக்களோடு