பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அறப்போர்



என 19 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் காங்கிரசின் தீர்மானத்தின்படி பார்ப்பதானாலும் பீகார், டில்லி, மகாகோசல், ஐக்கிய மாகாணம் ஆக நாலே வட்டாரங்கள்தான் இந்துஸ்தானியை மொழியாகக் கொண்டன என்பது விளங்குகிறது.

மற்ற 16 வட்டாரமும் வெவ்வேறு மொழிகளே பெற்றுள்ளன.

எனவே, இந்த 4 வட்டார மொழியை, பிற வட்டாரங்கள் மீது சுமத்துவது அடுக்குமா?

இந்துஸ்தானிதான் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பேசுவது என்று கூறுவது புள்ளி விவரத்தின்படி நிலைக்கக்கூடிய வாதமா? காங்கிரஸ் கணக்குப்படியே 19 வட்டாரத்திற்கு 4 வட்டாரம்தானே இந்துஸ்தானி மொழி கொண்டன?

அங்ஙனயிருக்க, அம்மொழி எப்படி இந்தியப் பொது மொழியாகும்?


பல தமிழ்ப் பேரறிஞர்கள், பெரும் பெரும் தலைவர்கள், கலைஞர்கள், கவிவாணர்கள், தாய்மார்கள், மாணவர்கள், மாணவிகள் உட்பட நாம் பல ஆயிரக்கணக்கில் கூடியுள்ள இடத்தில், கட்டாய இந்தி நுழைவைக் கண்டிப்பதாய் ஒரு தீர்மானம் இயற்றிவிட்டுச் சென்றுவிடுவதாலோ, அல்லது தமிழின் தொன்மை குறித்தோ, அதன் இனிமை குறித்தோ பேசிவிட்டுப்--போய்விடுவதாலோ யாதொரு நன்மையும் ஏற்பட்டு விடாது. சற்றேறக் குறைய