பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

53



சிறுமதியாளர்கட்கு நன்மதி போதித்திடுவோம். சர்க்கார் அடக்கு முறைக்குச் சரியான புத்தி கற்பித்திடுவோம். கடந்த போராட்டத்திற்கு 10 வருடத்திற்குப் பிறகு இப்போதேனும் முற்றுப்புள்ளி வைத்திடுவோம். தாய்மார்களே! பெரியார் உங்களை அழைக்கிறார். சென்ற எதிர்ப்பின்போது அவரை எதிர்ப்பில் மாட்டிவிட்டது தாய்மார்கள்தான்! எனவே, தாய்மார்களையே அவர் விரும்பி அழைக்கிறார். எனவே, வாருங்கள் விரைந்தோடி! உங்கள் எதிர்ப்பால் சர்க்காரே அழிந்துபோம்! ஹிந்தியும் ஒழிந்துபோம்!


✽✽✽