பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

57



நாம் நேற்று முன்தினம்வரை நினைத்தோம், ரெட்டியார் அவர்களும் ஹிந்தியைத் தாமாக விரும்பவில்லை; அவர்மீது அதிகாரத்தின் மூலம் வடநாட்டாரால் அம்மொழி திணிக்கப்படுகிறது என்று. அவருடைய உள்ளம் ஹிந்தியை வரவேற்கவில்லை என்றுதான் நாம் இன்றைய நாள்வரை நினைத்திருந்தோம். ஆனால் இன்று, அந்நினைப்புக்கு இடமில்லாமல் போய்விட்டது. ராஜீய உரிமையை வடநாட்டவரிடமிருந்து பெற நமக்கு இந்தி அவசியம் என்று அவர் கூறிவிட்டபிறகு, நாம் அவருடைய உள்ளத்தைப்பற்றியோ உள்ள உணர்ச்சியைப்பற்றியோ கவலைப்படவேண்டிய அவசியமில்லை. எங்களுக்கும் 'ராஜ்யம் என்பது என்ன? ராஜ்ய உரிமை என்பது என்ன?' என்று சற்று தெரிந்தே இருக்கிறது! ஓமாந்தூராருக்குத்தான் அல்லது அவரது சிஷ்யகோடிகளுக்குத்தான் ராஜ்யத்தின் தன்மை தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எந்த இராஜ்யத்திலாவது கேட் டிருப்பீர்களா, ராஜ்யபாரத்தை ஏற்று நடத்துபவர்களே, தம்மால் மதுவிலக்குக்கென்று மதுவிலக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களே, மதுவிலக்கு உத்தரவை மீறி நடத்துகிறார்கள் என்று கூற.

சர்க்கார் அதிகாரிகளே சர்க்கார் சட்டத்தை மீறுகிறார்கள் என்றால் அப்படிப்பட்ட சர்க்காரும் ஒரு சர்க்கார் ஆகுமா?

மதுவிலக்கு போகட்டும்! ஜமீன்தாரி ஒழிப்பு விஷயத்தில்தான் இவர்கள் என்ன ஒழுங்காக நடந்துகொள்ளுகிறார்கள்? ஜமீன், இனாம் இவைகளை ஒழிப்பதாகக் கங்கணம் கட்டிக்கொண்ட பிரபுக்கள், இனாம்களை ஒழிப்ப தில் காலந் தாழ்த்துவானேன்? ஏழைகளின் பிரதிநிதிகள்