பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

67



மாட்டோம். குரோத உணர்ச்சி அமைதியைக் கெடுக்கும். அமைதி கெட்டால் தோல்விதான் கிடைக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

அன்னையையும், தமிழையும் காக்கத் துவக்கப்படும் போராட்டம் கட்டாயம் வெற்றி பெற்றே தீரும். நம் போராட்டம் வெற்றி பெறும் என்பது நம்மைவிட ஆட்சியாளருக்கே நன்கு தெரிந்திருக்கிறது.

இன்றேல், நீங்கள் நினைக்கிறீர்களா, கலியுக ஜனகர் என்று கருதப்படும் ராமசாமி ரெட்டியார் ஒரு நாஸ்திக ராமசாமியைக் கூப்பிட்டுப் பேசுவாரென்று? போராட்டத்தை நிறுத்த ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால், நீங்கள் நினைக்கிறீர்களா, தாம் மகா பாபி என்று கருதும் பெரியார் ராமசாமியை அழைத்து ரமண ரிஷி சிஷ்யர் பேசுவார் என்று? அடக்குமுறையால் உரிமைப் போரைத் தடுக்க முடியுமா, முடியாதா என்பது அவர்களுக்குத் தெரியாததல்லவே !

அடக்குமுறை என்ன செய்யும்?

அடக்குமுறையால் என்ன செய்ய முடியும்? சில பேரைச் சிறையில் அடைக்கலாம்; சிலரை நொண்டியாக்கலாம்; சிலரைக் குருடராக்கலாம். இந்தத் துர் அதிர்ஷ்டம் வாய்ந்த திராவிட நாட்டில் ஒரு திராவிடனுக்கு ஒரு கை போனால் அவன் சட்டைத் துணியில் கெஜம் மீதியாகும். ஒரு கால் போனால், கால் சட்டைத் துணியிலிருந்து ஒரு! கெஜம் மீதியாகும். இரண்டு கால்களும் போய் நொண்டியானால் அவன் இரண்டு காலுள்ளவனைக் காட்டிலும் அதிகமாக ஆரியத்திற்குச் சேவை