பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அறப்போர்



செய்ய முடியாது. கை போனாலும், கால் போனாலும் கருத்தாவது நிலைத்து நிற்கும்.

தொண்டர்கள் பிணமாக நேர்ந்திடினும், அவர்களுடைய கருத்து பிணமாகாது. அது அப்பிணத்தைச் சுற்றி நின்று அதைக் கண்டோர்க்கெல்லாம் அக் கருத்தைத் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கும். எனவேதான், பிற கட்சிகள் கேட்காததை, கேட்கத் துணியாததை நாங்கள் கேட்கிறோம்.

அதுவும் பதவி கிடையாது, பட்டம் கிடையாது, சிறை செல்ல வசதியுண்டு, அடி படவும், உயிர் விடவும் வசதியுண்டு, வாருங்கள் துணிவிருந்தால், என்றுதான் தொண்டர்களை அழைக்கிறோம்! ஏன்? எங்கள் கருத்திலே, எங்களுக்கு அவ்வளவு தெளிவுண்டு; பற்றுதல் உண்டு; அக்கருத்தை நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆர்வமுண்டு; நிலைநிறுத்த முடியும், உயிர் கொடுக்கச் சித்தமாயிருந்தால் என்ற உறுதியுண்டு: உயிர் கொடுக்க எங்களுக்குத் துணிவுமுண்டு. எனவேதான், கண்ணிழந்தாலும் கருத்தை இழக்காமல் இருக்கவேண்டும் என்று பறை சாற்றி வருகிறோம். நம் கலாசாரத்தைக் குலைக்க வட நாட்டாரால் செய் யப்பட்டுவரும் கட்டுப்பாடான சூழ்ச்சியைக் கெடுக்கவே நாம் கைம்மாறு கருதாப் போர் தொடுக்கிறோம்.

கைம்மாறு கருதாப் போர்

இந்தக் கைம்மாறு கருதாப் போரைப்பற்றிக் காங்கிரஸ்காரர்கள் என்ன பேசிக் கொள்வார்கள், காங்கிரஸ் பத்திரிகைகள் என்ன எழுதும் என்பது பற்றி எங்களுக்குத் தெரியும். இந்தப் போரைக் கண்டிப்பாய் இருட்டடிப்புச் செய்-