பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அறப்போர்


யாக்கி உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்களா?

இங்ஙனம் தென்னாட்டிலிருந்து வடநாடு சென்று உறையும் தமிழராவது, அல்லது வடநாட்டிலிருந்து தென்னாடு வந்து வாழும் வடவர்களாவது, தங்கள் இருசாராருக்கும் பொதுவாக இந்தியைப் பொதுமொழியாக்கித் தருதல் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அதற்காகவே தான் "நாங்கள்" இந்தியைப் பொதுமொழியாக்க முயன்று வருகின்றோம் என்பதாக நாளதுவரை எந்த இந்தி இயக்கத் தலைவர்களாவது கூறவில்லையே ! மற்று அத் தலைவர்கள் இந்தி மொழியைப் பொதுமொழியாக்கினால் இந்திய மக்களுக்கு நன்மைகள் பல உண்டாகுமென்று தங்கள் கருத்திற்பட்டதாகவும், அதனாலேதான் தாங்கள் இந்தியைப் பொதுபொழியாக்க முயன்று வருவதாகவுந்தானே கூறினார்கள்--கூறுகின்றார்கள். இதனால் இத்தலைவர்களின் இவ்வொரு செயலானது பொதுமக்களின் விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வேண்டாக்கிளர்ச்சி என்பது புலப்படவில்லையா?

இவ்வாறுக எவராலும் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படாத, ஒரு பயனுமற்ற கிளர்ச்சியாகிய இந்தி கட்டாயக் கல்வி முறையைத் தோழர் முத்துரங்கம் போன்றார் சிலர் தம் தலைமீது தூக்கிச் சுமந்து திரிவதன் காரணம், அவர்களுக்கு இதுபோன்ற பயனற்ற துறைகளில் இறங்கித் தம் காலத்தையும், முயற்சியையும், பொதுமக்களின் பணத்தையும் செலவு செய்வதைத் தவிர, மக்களுக்கு நன்மைகள் ஏற்படக்கூடிய வேறு துறைகளில் இறங்கிப் பாடுபடுவதற்குரிய ஆற்றலும், ஆர்வமும் இல்லையென்று கருதுவதா, அல்லது அவர்களின் போக்கை வேறு வகையில் நினைத்து அழுவதா ?