பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

9



இனி, தாய்மொழியாகிய தமிழைப் படியாதவர்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்குமேல் காணப்படும் இந்த இரங்கத்தக்க நிலைமையில், இந்தியைக் கட்டாய பாட மாக்குவோம் என்று கங்கணம் கட்டி நிற்கும் தமிழ் மக்கள் சிலரின் ஒரு செயலை நோக்குமிடத்து, அது "தாய் தஞ்சையில் தன் கைப்பிச்சை எடுக்கத், தனயன் குடந்தையில் கோவிகை புரிந்தது" போலுமன்றோ இருக்கிறது! என்னே, இவர்களது அறிவுடைமை! தாய் மொழியை விடுத்துப் பிறமொழி கோடல் பெருமையாகுமா?

பெரியீர்! நம்மை அடுத்த ஆந்திர (தெலுங்கு) நாட்டை நோக்குங்கள். அம்மொழியின் ஆக்கத்தை அறியுங்கள். அவர்களின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் பாருங்கள். மொழிக்காகச் செய்யும் முயற்சியை நோக்குங்கள். அவர்கள் இப்போது Andhra University என்ற பல்கலைக்கழகம் ஏற்படுத்தி, அதில் தெலுங்கு மொழியைக் கட்டாயக் கல்வியாக வைத்துக் கற்றுத் தேர்ச்சியடைய ஏற்பாடு செய்து வருகிறார்கள். மலையாளத்திலும் Kerala University என்ற பல்கலைக் கழகம் ஏற்படுத்தி, மலையாள மொழியையும் நன்கு பயின்று வருகின்றனர். இங்ஙனமே வங்க (Bengal) நாட்டைக் காணுங்கள். அவர்கள் தங்கள் மொழிக்காகக் கைக்கொண்ட முயற்சியைக் கேளுங்கள். வங்க இளைஞர்கள் தாய்மொழியைக் கங்கணம் கட்டிக் கொண்டு காத்தார்கள். உடல்,பொருள், உயிர் அனைத்தையும் அந்நாட்டு மக்கள் தங்கள் மொழிக்காகத் துறந்தார்கள். அதனால், அவர்கள் தாய்மொழி சிறப்புற்று இலங்குகிறது; சீர்பெற்றுத் திகழ்கிறது. "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?" இங்ஙனம் தமிழரல்லாத ஒவ்வொரு மொழி பேசுவோரும், தத்தம் மொழிகளையே முதன்மை-

2