பக்கம்:அறப்போர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


“தமிழுக்கு எங்கே போனாலும் மதிப்பு உண்டு என்பது உண்மைதான். ஆனாலும் அப்படி மதிப்பிட்டு உபசரிப்பதிலும் தரம் இருக்கிறதே! புலவர்களின் தகுதியை அறிந்து அதற்கு ஏற்பப் பேணும் இயல்பு உயர்ந்தது என்று யாவரும் சொல்கிறார்கள். உபகாரி களிலும் வேறுபாடு இருக்கிறது. பரிசில் தருவதனால் எல்லாப் புரவலர்களும் ஒரே மாதிரி இருப்பவர்கள் என்று கொள்ளக் கூடாது. அவர்களிடத்திலும் தகுதியினால் வேறுபாடு உண்டு; வரிசை உண்டு.”

“தாங்கள் சென்ற நாடுகளில் இந்த நாட்டில் உள்ளவர்களைவிடத் தகுதியால் உயர்ந்த புரவலர்களைத் தாங்கள் பார்த்திருப்பீர்களென்றே தோற்றுகிறது. அதனால்தான் எங்களையெல்லாம் அடியோடு மறந்து விட்டீர்களோ!” என்று வளவன் கேட்டான்.

புலவர்: அப்படி நான் சொல்லவில்லையே புரவலர்

புலவர்களின் வரிசையறிந்து உதவுவது போலவே,
புலவர்களும் புரவலர்களின்
தரத்தை அறிந்து போற்றுவார்கள். ஒளி
யைத் தருகின்ற பொருள்கள் பல உண்டு.
கதிரவன் ஒளியைத் தருகிறான். சந்திரனும்
இரவில் ஒளியைத் தருகிறான் விளக்குகள்
இருளைப் போக்குகின்றன. மக்கள் எல்லா
82
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/100&oldid=1267470" இலிருந்து மீள்விக்கப்பட்டது