பக்கம்:அறப்போர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தாய். அப்பொழுதெல்லாம் பண்டங்களைத் திருப்பிக் கொடுப்பதாக அளந்து வாங்கினாயே, அந்தக் குறி எதிர்ப்பைகளை யெல்லாம் ஒன்று தவறாமல் கொடுத்துவிடு. இன்னாருக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று யோசிக்க வேண்டாம். மனங்கொண்ட மட்டும் கொடு. என்னைக் கேட்டுக் கொடுக்கவேண்டும் என்று எண்ணாதே. என்னைக் கேட்கவே வேண்டாம். யாருக்காவது கொடுக்கவேண்டுமென்றால் உடனே கொடுத்துவிடு; யோசித்துக்கொண்டு நிற்காதே. ‘இவ்வளவு காலமும் வறுமையில் வாழ்ந்தோமே ; வந்ததைப் போற்றிப் பாதுகாத்துச் சாமர்த்தியமாக வாழலாம்’ என்று எண்ணாதே. இந்த வளத்தைத் தந்த வள்ளல் இருக்கிறான்; என்ன கேட்டாலும் கொடுப்பான். கேளாமலே வேண்டியதை அறிந்து கொடுப்பான். ஆகையால் எல்லோர்க்கும் கொடு. நானும் கொடுக்கிறேன். நீயும் கொடு. இந்த வீட்டுக்கு நீதானே தலைவி? ஆதலால் தாராளமாகக் கொடு. உன்னைத் தடுப்பவர் யார்?”

இவ்வாறு புலவர் சொன்னதைக் கேட்ட அவர் மனைவி என்ன சொல்வாள்! முன்னே சில மகளிர் வருங்காலத்தைப் பற்றிச் சொல்லியவை அவள் நினைவுக்கு வந்தன. அவள் கண்களில் இன்பத்திவலைகள் எழுந்தன.

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/136&oldid=1267511" இலிருந்து மீள்விக்கப்பட்டது