பக்கம்:அறப்போர்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


கோலம் ஒன்றுபட்டும் வேறாகியும் நிற்கும் நிலையைக் காட்டுவது; பெண்ணின் திருவுருவம் ஒரு பாதியாக, ஒரு திறனாக, உள்ள கோலம் அது.

அந்த உருவமாகிய சக்தியைத் தமக்குள் அடக்கி ஒன்றாக நிற்கும் நிலையும் உண்டு. சிவமும் சக்தியும் ஒன்றுபட்டு நிற்கும் கோலம் அது. அக் கோலத்தில் சிவமே தோன்றுமன்றிச் சத்தி தோன்றுவதில்லை. சிவத்திலிருந்து சத்தி தோற்றுவாள். சத்தியிடத்திலிருந்து தத்துவங்களெல்லாம் தோற்றும். தோற்றும் முறை இது. ஒடுங்கும் முறை இதற்கு மாறானது. தத்துவங்கள் ஒன்றனுள் ஒன்று அடங்க, இறுதியில் யாவும் சக்தியுள் அடங்கும். அப்பால் அச் சக்தியும் சிவத்துள் அடங்கும். ஒடுங்கும் முறையில் சிவபிரான் தமக்குள் சக்தியை அடக்கிக் கொள்ளுதலைப் பெருந்தேவனார் சொல்கிறார்.

சிவபெருமான் தம்முடைய திருமுடியிலே பிறையைச் சூடியிருக்கிறார். அது அவர் திருமுடியில் இருந்தபடியே அவருடைய நெற்றியிலே தன் ஒளியை வீசுகிறது. அதனால் அந்த நுதலுக்கு வண்ணமாக, அழகாக அமைந்திருக் கிறது. சந்திரனுக்கு இறைவனார் திருமுடிமேல் இருக்கும் சிறப்புக் கிடைத்தது. அது தேவர்களில் யாருக்கும் கிடைக்கவில்லை. தேவர்,

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/24&oldid=1267396" இருந்து மீள்விக்கப்பட்டது