பக்கம்:அறப்போர்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருந்தவத்தோன்


அசுரர், முனிவர் முதலாக அறிவுடைய கூட்டத்தினரைப் பதினெட்டு வகையாகப் பிரிப்பர்; பதினெட்டுக் கணம் என்று சொல்வார்கள். அந்தப் பதினெட்டுக் கணத்தினரும், ‘இந்தப் பிறைக்கு வந்த பாக்கியமே பாக்கியம்!’ என்று அதைக் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறு கொன்றைக் கண்ணியர், கொன்றை மாலையர், இடபவாகனர், இடபத்துவசர், நீலகண்டர், மாதிருக்கும் பாதியர், மதி முடிக் கடவுள் ஆக விளங்கும் சிவபெருமான் சடாதாரியாக இருக்கிறார். சடாதாரி என்ற மாத்திரத்திலே தவமுனிவர் திருக்கோலந்தான் நம் நினைவுக்கு வருகிறது. மற்றக் கடவுளரின் கோலங்களில் இத்தனை தவச் சிறப்புடைய அடையாளங்களைக் காண முடியாது. திருநீறும், தோலாடையும், சடா பாரமும் ஆகியவை தவக் கோலத்தைச் சார்ந்தவை, ஆகவே சிவபிரானை அருந்தவர் என்று சொல்வது வழக்கம். “அருந்தவ முதல்வன்” (கலி, 100 : 7) என்று கலித்தொகை பேசுகிறது.

தாழ்ந்த சடையினாற் சிறப்பாக விளங்கும் அருந்தவத்தினராகிய இப்பெருமான் திருமுடியில் என்றும் நீர் குறையாத கங்கை இருக்கிறது. எல்லா உயிர்க்கும் இம்மை மறுமை இன்பங்களைத் தருவது கங்கை. கங்கை

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/25&oldid=1267397" இருந்து மீள்விக்கப்பட்டது