பக்கம்:அறப்போர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறப்போர்

லகில் தோன்றிய உயிர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில தொழில்கள் இருக்கின்றன. உண்பது, உறங்குவது, சந்ததியை உண்டுபண்ணுவது ஆகிய செயல்கள் பறவை, விலங்கு, மக்கள் என்ற எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. உடம்போடு கூடிய உயிர் களாகிய இவற்றிற்கு உடம்பின் தொடர்புடைய செயல்களில் பல பொதுவாக இருப்பது இயல்பு.

ஆயினும் இந்தப் பொதுவான செயல்களில் ஆறு அறிவுடைய மனிதன் தன் அறி வைப் பயன்படுத்திக் கொள்கிறான். கீரைப் பாத்தியில் கீரை நன்றாக வளர்ந்திருக்கிறது. அந்தக் கீரையை மாடும் உண்ணும்; மனிதனும் உண்ணுவான். மாடு தன் நாக்கை வளைத்துச் சுருட்டிப் பாத்தியில் இருந்தபடியே கீரையை உண்டுவிடும். மனிதன் அப்படிச் செய்வதில்லை. கீரையைப் பக்குவமறிந்து பறித்துத் தண்டைக் குழம்புக்கும் கீரையை மசியலுக்கும் உபயோகப்படுத்துகிறான். கீரையைக் கீரை வடைக்கும் பயன்படுத்துகிறான். அவனுக்-

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/31&oldid=1265837" இலிருந்து மீள்விக்கப்பட்டது