பக்கம்:அறப்போர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


திசையும் ஆகாயமும் ஆகிய நான்கு பொருளோடும் ஒரு சேர வைத்து எண்ணுவதற் குரியவை நம்முடைய மன்னர்பிரானுடைய அறிவும் ஈரமும் கண்ணோட்டமும் என்று. அவர் சிந்தனை விரிந்தது. மறுபடியும் அதில் ஒரு சுழிப்பு ஏற்பட்டது. ஒருங்கு வைத்து எண்ணுவதா? விசாலமான முந்நீரின் ஆழத் தையும் அளந்தறிவார் இருக்கலாம். வியன் ஞாலத்து அகலத்தையும் ஏதேனும் உபாயத்தால் அளவு காண்பதும் இயலும். வளி வழங்கு திசையையும் ஒருகால் அளத்தல் கூடும். ஒரு வடிவும் இன்றி வறிதே நிலைபெற்ற ஆகாயத்தையும் யாரேனும் தெய்வத் தன்மையுடையார் அளந்தறிந்து சொல்லலாம். ஆனால் நம்முடைய வேந்தருடைய அறிவையும், ஈரத்தையும்,பெருங் கண்ணோட்டத்தையும் அளந்தறிவது இயலாத காரியம் என்ற தீர்மானத்துக்கு வந்தார்.

கவிஞர்களுக்கு ஏதேனும் அரிய செய்தி புலப்பட்டாலும், அற்புத உணர்ச்சி எழுங்தாலும் அவை அப்படி அப்படியே நின்று விடுவதில்லை. அவர்களுடைய கவிதை உள்ளத்தில் அவற்றின் நினைவுகள் ஊறிப் பின்பு கவிதையாக மலரும். குறுங்கோழியூர்கிழார் தம் அரசனுடைய இயல்புகளை அறிந்து வியந்தார். அந்த வியப்பு அவர் உள்ளத்தே நின்றது;

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/83&oldid=1267452" இலிருந்து மீள்விக்கப்பட்டது