பக்கம்:அறப்போர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


அது கவியாக வெளிப்படும் காலத்தை எதிர் நோக்கி நின்றது. :

அதற்குள் அந்த உணர்ச்சிக்குப் பின்னும் வளமூட்டும் செய்திகளைப் புலவர் அறிந்து கொண்டார். நல்ல ஆட்சியில்லாத நாட்டில் பகைவர்களால் குடிமக்களுக்கு நேரும் துன்பங்கள் பல. கொடுங்கோலாட்சியானல் மன்னனாலே விளையும் அல்லல்களே பலவாக இருக்கும். கடும்புலி வாழும் காட்டிலேனும் ஒளிந்து வாழலாம். கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில் அம்மன்னனது கொடுங்கோன்மைக்குத் தப்பி வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் தீயிலே நிற்பவரைப் போல அல்லற்பட்டு வாழ வேண்டியிருக்கும்.

அத்தகைய கொடுமையைச் சேர நாட்டுக் குடிகள் கனவிலும் அறியார். பகையின்மையினால் அயலாருடைய கொடுமை அந்நாட்டினருக்கு இல்லை. மன்னன் ஈரம் உள்ளவனாதலின் அவனால் கொடுமை உண்டாக ஏது இல்லை. ஆகவே வெம்மையை உணராதவர்கள் சேர நாட்டு மக்கள். யாரும் அவர்களைத் தெறுவதில்லை. ஆயினும் இரண்டு வெம்மை அந்த நாட்டில் உண்டு. அந்த இரண்டு. வெம்மையினாலூம்ய குடிமக்களுக்கு நன்மையே. உண்டாயின.சொற்றை சமைக்கும் நெருப்பு

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/84&oldid=1267388" இலிருந்து மீள்விக்கப்பட்டது