பக்கம்:அறப்போர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மறப்பது எப்படி?

சோழ நாட்டில் உள்ள ஆவூர் என்ற ஊரிலே பிறந்தவர் மூலங்கிழார் என்னும் புலவர். அவர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலின் அவருக்கு அப்பெயர் வந்தது என்று தோன்றுகிறது. அக்காலத்தில் கிள்ளிவளவன் என்னும் அரசன் சோழ நாட்டை ஆண்டு வந்தான். புலவர்களைப் பாராட்டி உபசாரம் செய்து பரிசில் வழங்குவதில் அவன் சிறந்தவன். ஆதவின் அடிக்கடி, புலவர்கள் அவனை நாடிச் சென்று தங்கள் புலமைத் திறத்தைக் காட்டிப் பரிசில் பெற்றுச் செல்வார்கள். அந்தப் புலவர் கூட்டத்திலே ஆவூர் மூலங் கிழாரும் ஒருவர். பல புலவர்கள் வந்தாலும் அவரவர் தகுதியை அறிந்து பாராட்டி மரியாதை பண்ணும் இயல்பு கிள்ளிவளவனிடம் இருந்தது. இப்படித் தரம் அறிந்து பரிசில் தருவதை வரிசையறிதல் என்று பழம் புலவர்கள் சொல்வார்கள். கல்லையும் இரும்பையும், தங்கத்தையும் ஒரேமாதிரி எண்ணாமல் வெவ்வேறாக அறிந்து பயன்படுத்திக் கொள்வது போல, வெவ்வேறு புலவர்களை அவரவர்கள் புலமை வகையை அறிந்து அவர்களுடைய

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/96&oldid=1267466" இலிருந்து மீள்விக்கப்பட்டது