பக்கம்:அறப்போர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


சென்று வாழ்வதும் உண்டு. மன்னர்களுக்குள் போர் நிகழ்ந்தால் ஒரு நாட்டிலுள்ள குடி மக்கள் மற்றொரு நாட்டுக்குப் போவது இயலாது. ஆயினும் புலவர்கள் மாத்திரம் தம் மனம் போல எங்கே வேண்டுமானாலும் போகலாம். ஒரு நாட்டிலே பிறந்தவராயினும் புலவர்கள் எல்லா நாட்டுக்கும் உரியவரென்றும், அவர்களால் தீங்கு நேராதென்றும் மக்கள் நம்பி வந்தனர். புலவர்களுடைய ஒழுக்கம், அறிவு இரண்டும் மக்களுடைய பாராட்டுக்கு உரியனவாகச் சிறந்து விளங்கின.

மூலங்கிழார் வராததனால், அவர் பாண்டி நாட்டுக்கோ சேர நாட்டுக்கோ சென்று அங்குள்ளவர்களின் உபசாரத்தில் இன்புற்றிருப்பார் என்று சோழ மன்னன் எண்ணினான். புலவர்களிடம், “அவரைக் கண்டீர்களா?” என்று விசாரித்தான். அவனுக்குப் புலவரிடம் இருந்த பேரன்பே அப்படி ஆவலோடு விசாரிப்பதற்குக் காரணமாக இருந்தது.

கிள்ளிவளவன் தம்மைப் பற்றி அடிக்கடி விசாரிக்கிறான் என்ற செய்தி மூலங்கிழார் காதுக்கு எட்டியது. அவனைப் பார்க்கக்கூடாது என்று அவர் இருந்தார்? பல ஊர்களுக்குச் சென்று வந்த இளைப்பினால் சில காலம் எங்கும் போகவேண்டாம் என்று தம் ஊரில் தங்கி-

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/98&oldid=1267468" இலிருந்து மீள்விக்கப்பட்டது