பக்கம்:அறவோர் மு. வ.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

107

எண் நாடகத்தின் பெயர் நூலின்ப பெயர் வகை காட்சி
1 பச்சையப்பர் பச்சையப்பர் சமூகம்; வரலாறு 21
2 இளங்கோ மூன்று இலக்கியம்; வரலாறு 7
3 திலகவதியார் நாடகங்கள் வரலாறு 7
4 வீண் கனவு 3
5 காதல் எங்கே? காதல் எங்கே? சமூகம் 5
6 கடமை எங்கே? (ஒரங்க 3
7 நன்மை எங்கே? நாடகங்கள் 9
8 மனச்சான்று 7
9 கிம்பளம் மனச்சான்று 8
10 ஏமாற்றம் (ஒரங்க சமூகம் 7
11 பொதுநலம் நாடகங்கள்) 6

இந்த 11 நாடகங்களைத் தவிர, 'அல்லி’ என்னும் புதினம் டி. கே. கணபதி என்பவரால் 'டாக்டர் அல்லி' என்னும் பெயரில் நாடகமாக்கப்பட்டுள்ளது; மேலும் மூன்று நாடகங்கள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள 'இளங்கோ' தனி நூலாகவும் வெளியிடப்பட்டது.

டாக்டர் மு. வ. எழுதிய முதல் நாடகம் 'பச்சையப்பர்’ என்பதாகும்; இஃது ஒரு வரலாற்று நாடமாகும். 1951 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் எழுதப்பெற்ற இந்நாடகத்தில் 21 காட்சிகள் அமைந்துள்ளன. 104 பக்கங்களைக் கொண்ட இந்நாடக நூலின் முன்னுரையில்,

தமிழ்நாடு வண்மையில் எல்லையையும் கண்ட நாடு. ஈதலையே வாழ்தலின் ஊதியமாகக் கொண்ட வள்ளல்கள் பலர் தோன்றிய நாடு இது. 18 ஆம் நூற்றாண்டில் அறம் பல புரிந்த வண்மையாளராய்த் திகழ்ந்த தமிழர் பச்சையப்பர். அவருடைய அறநெஞ்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/110&oldid=1462054" இலிருந்து மீள்விக்கப்பட்டது