பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி ##3

'இப்போது, என்னுடைய தண்டை உடைத்துப் பார், உனக்கொரு வியப்பான உணர்ச்சி தோன்றும் என்றது.

நான் அதன் தண்டை இரண்டாகப் பிளந்தேன். அதனுள்ளே அளவிடமுடியாத வெதவெதப்பு இருந்தது.

'இந்தச் சூடு, அந்தத் தண்டுக்குள் எப்படி வந்தது? உனக்குத் தெரியுமா?’ என்று, பேசிற்று,

வைதீகனாக இருந்தால் எல்லாம் கடவுள் செயல்’ என்பாய். உன்னைப் பார்த்தால் பகுத்தறிவுவாதி போல இருக்கிறாயே!” என்றது.

நான் விழித்தேன். 'ஒரு கரு வளர்வதற்கும் - அது வளர்ந்து உரு பெறுவதற்கும் - சூடும் குளுமையும் தேவை.

இப்போது நான் வளர்ந்திருக்கிறேன் என்றால், இந்தச் சூட்டாலும் - குளுமையாலும்தான்.

'இந்தச் சூடு எனக்கு எப்படி வந்தது என்றால், என் உடல் பூராவும் இருக்கின்ற செல் என்ற உயிர்ப்புச்சக்தி - சூரிய ஒளியால், சூடான நீரில் இருக்கின்ற, வெதவெதப்பை உறிஞ்சிவிடுகிறது.

அதன் விளைவுதான், நான் நீரால், சூழப்பட்டிருந்தாலும், எனது உடல் - எப்போதும், வெதவெதப்பாகவே இருக்கிறது’ என்றது.

அறிஞர் அண்ணா அவர்கள், நீரால் சூழப்பட்ட கடற் செடியைப் போல, பாதகம் விளைவிக்கின்றவர்களுக்கு மத்தியில் இருக்கின்றார்.

உதயசூரியன் - மதிய சூரியனின் அருள் கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் பல கோடி ஏழை மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களின் துன்பச் சூட்டை நன்குணர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள்; அந்தத் துன்பத்தை மட்டும் - தான் - உறிஞ்சி வைத்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவரும் அந்தக் குடும்பத்திலே பிறந்த ஒருவரல்லவா?