பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

75மலைக் குன்றுகளின் சரிவுகளிலேயுள்ள கற்களைக் காட்டாறுகள் கூழாங்கற்களாய் கரைத்து வருவதைக் கண்டிருப்பாயே.

அந்த ஆறுகள்; அடவிகளின் இடுக்கிலே வளைந்து வளைந்து; பாம்புகளைப் போல சீறிப் பாய்ந்து வருவன:

பலவகை மர இனங்களை, அவ்வாறுகள் சந்திக்கும்! அவற்றின் மணங்களோடு அவை ஒடி வரும்.

சந்தன மரத்தின் மணவாழ்வைக் கூட, தன் தண்தோளிலே பல்லக்கெனச் சுமந்துவரும்.

அந்த ஆறுகளுக்கு முகத்துவாரமெனும் சாவுகள் உண்டு. அதையும் துச்சமென மதித்து; மரணத்தை மஞ்சமாக ஏற்று; காற்றைவிடக் கடுகி ஓடி வரும்.

அவை ஏன் அவ்வாறு ஓங்காரமிட்டும்; ஒசையற்றும்; ஒடி ஆடி - பாடியும் - அன்னமென வருகின்றன.

கதிர்களின் ஆணவ ஊடுருவல்கட்கு அடிமையாகிவிட்ட பூமியைக் குளுமைப் படுத்தவே வருகின்றன.

வெப்பமெனும் பகையை விரட்டுகிறேன் பார் என்று,

வானமெனும் அடலேறு மழையாக முழக்கமிடுகிறான்.

அந்த வான் முழக்கத்தை ஏற்று, மலைச்சரிவுகளிலே கூடுகின்றன.

கானகம் என்ற பகுதிகளிலே அவை பரந்த விரிந்து நதியாக உருப் பெறுகின்றன.

ஆணவக் குரல் கொடுத்து, பூமியில் அண்டும் கதிர்ப் பகைவனுக்குள் எரியும் உயிர் விளக்கை, ஊதியணைப்பவை இந்த ஆறுகள்தாம்.

பொங்கும் வளத்தை அங்கே வலிவுபடுத்திட, அவைப் பொலிவோடு பாய்கின்றன.

அந்த அடவியிலே, மலைச்சரிவுகளிலேதான்; வேங்கை மரங்கள். விளைகின்றன தம்பி; என்றது வேங்கை பூ.