பக்கம்:அறிவியற் சோலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினரால் பேசப்படுவன ஐந்நூற்றிற்கு மேற்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூகினியா, பசிபிக் தீவுகள் முதலிய இடங்களில் வழங்குவன ஐந்நூற்றிற்கு அதிகமான மொழிகள். ஆசிய மக்களால் கையாளப்படும் மொழி கள் ஒரு சில நூறுகளில் அடங்கப்பெறும். எனினும், இம்மொழிகள் பலவும் ஒரு தன்மையான வரலாற்றுச் சிறப்புடையன என்று கூறுவதற்கில்லை. இம் மொழி களிலும் ஒரு சிலவே பண்பட்ட மொழிகளாகும். உலகில் வழங்கும் பல்வேறு மொழிகளுள், ஒரு சிலவற்றுள் காணப்பெறும் ஒற்றுமையினைக்கொண்டு, ஏனை மொழிகளையும், பத்து இனங்களுக்குள் அடக்கி யுள்ளனர். அவைகள் வருமாறு : 1. இந்தோ ஐரோப்பிய மொழிகள் (IndoEuropean). * 2. செமிட்டோ-ஹேமிடிக் மொழிகள் (SemitoHamitic). 3. ஊரல்-ஆல்டெயிக் மொழிகள் (Ural-Altaic). 4. சப்பானிய - கொரிய மொழிகள் (JapaneseKorean). 5. சிளுே - திபெத்திய மொழிகள் (SimoTibetan). 6. திராவிட மொழிகள் (rெavidian). 7. மலாய் - பாலினேசிய மொழிகள் (MalayoPolynesian).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/10&oldid=739240" இலிருந்து மீள்விக்கப்பட்டது