பக்கம்:அறிவியற் சோலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ5 என்னும் அறிஞர் பின்வருமாறு கூறுகின்ருர் :' இங்ங்ணம் ராகோசியினைக் குற்றம் சாட்டுவதின் மூலம் புரட்சி செய்யும் ஹங்கேரி மக்களுக்கு ஒரு புதுப் பாடம் கற்பிக்க அரசியலார் விரும்பினர் ”. இக்குற்றச் சாட்டின் மூலம், மேலை நாட்டு அரச பரம்பரையினர். உலகப் பொதுவுடமைத் தத்துவத்தைத் தவறு என்று காட்டவும், சோவியத் யூனியனின் செயல் நீதியற்றது என்று உலகினர்க்கு எடுத்துக் காட்டவும் முயன்றனர். ஆல்ை முழு வெற்றியினை அவர்கள் அடைந்தார்கள் இல்லை. அவர்களது திட்டங்கள் சரியத் தலைப்பட்டன. இதன் காரணமாக ராகோசியையும் அவர்தம் நண்பர் களையும் இவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதற்குரிய அடிப்படைக் காரணத்தை ஆராய்வோ மானுல், குற்ற விசாரணையின் கண், நாம் சிறிது நேரத்தில் செத்து மடிந்து விடுவோம்' என்று மனங் கலங்காது நின்ற ராகோசியின் மன உறுதிதான் அவரது வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என்பது புலப்படும். வீங்கு தோளினராகவும், உரம் பெற்ற நெஞ்சினராகவும், நுட்பமான அறிவுடையவராகவும், தான் குற்றமற்றவர் என்று எடுத்துக் கூறுவதில், திட்பமான திறமையுடையவராகவும், நீதி மன்றத்தில் ராகோசி விளங்கினர். தன்னைக் காத்துக்கொள் வதைக் காட்டிலும், தன் கட்சியின் பெருமைக்கு மாசு ஏற்படா வண்ணம் காத்து நின்ருர். உண்மை யினை உள்ளவாறே உரைத்து, எதிரிகளது சூழ்ச்சித் திறனை எல்லாம் அம்பலப்படுத்தி, சொற்களிலே தடுமாற் றம் இன்றிப் பேசி வாதிட்டு வல்லவராய்' நின்ருர், பொதுவுடமைக் கொள்கையினைச் சரிவரப் புரிந்துகொள்ளாது தப்புக் கணக்குப் போட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/39&oldid=739274" இலிருந்து மீள்விக்கப்பட்டது