பக்கம்:அறிவியற் சோலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 Ο அறிவியற் சோலை =====------- நின்று அதனைச் செலுத்தும் பரதவனை ஒத்திருந் தான் எனக் கூறியிருப்பது படிப்பவர்க்கு ஓர் விருந் தாகும். அடுத்து வெற்றி வீரனுக்கு மணமாலை சூட்டுவாள் மணப்பெண். ஆயர் வெள்ளமானது மகிழ்ச்சியில் குரவைக் கூத்தாடும். இன்ப வெள்ளத் தில் திளைத்து நிற்கும் வீரன், காளையின் கொம்பால் இடியுண்ட வலியெல்லாம் மறந்து நிற்பான். இவ் வாறு தமிழ்ப் பெருமக்கள் உயிருக்கும் உடலுக்கும் கொடிய ஊறு விளைவிக்கக் கூடிய விளையாட்டையும் விரும்பினர். மேலும் ஆயர் விளையாட்டாகக் கற்றுக் கொண்ட வேய்ங்குழலும், கொன்றைக் குழலும் மாடு களை ஒன்று திரட்டவும், அவற்றை வீட்டிற்கு நடத் தவும் பயன் பட்டது. இவ்வாறு தமிழ் விளையாட்டோடு கலையும் ஒன்றி வளர்ந்தது எனக் கூற வேண்டும். மருதம் எஞ்சா வளம் படைத்த நஞ்சை சூழ் பதியே மருத நிலமாகும். இந்நிலத்து வயல்களுக்கும் சோலைகளுக் கும் நடுவிலே, பாய்ந்தோடும் தமிழ் நாட்டு யாறு களிலே பருவ காலத்து வெள்ளம் கரை புரண்டோ டும். புது வெள்ளம் வந்தால் பக்கத்திலுள்ள தமிழ் உழவர்களுக்கும், பெண்களுக்கும் எல்லையில்லாத புதிய மகிழ்ச்சி பிறந்துவிடும். அன்று ஒரு திருவிழா வாகவே கொண்டாடப்பெறும். இவ்வாறே கழார்ப் பெருந்துறையில் காவிரி நதியில் புதுப்புனல் விழா நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் வஞ்சி அரச கிைய ஆட்டனத்தி என்பவன், வெள்ளத்தின் மேல் நர்த்தனம் செய்து நீராடி மக்களை மகிழ்வித்தான். ஆளுல் சமநிலையிலிருந்து தவறிய அவனைக் காவிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/54&oldid=739291" இலிருந்து மீள்விக்கப்பட்டது