பக்கம்:அறிவியற் சோலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அறிவியற் சோலை காட்டுகின்ருேம். இதற்கு அம்புலியாடல் ' என்று பெயர். தலை நரைத்த கிழவர்கள் ஊர்ப்பொது அம்பலங்களிலே கூடியிருந்து பொழுதுபோக்காக வல்லுக் காய்களை வைத்துச் சூதாடினர். இவ்விளை யாட்டினை இன்று சொக்கட்டான் ' என்றும், தாயம் என்றும் கூறுகின்ருேம். போர் என்ருல் பூரித்து விளங்கும் நம் மக்கள் இளமையிலிருந்தே போருக்கு வேண்டிய பயிற்சிகளையெல்லாம் விளையாட்டாகவே கற்றுக்கொண்டனர். யானையேற்றம், குதிரையேற்றம், தேர் செலுத்துதல் முதலியவற்றையும் விளையாட் டாகவே பழகித் தேர்ச்சி பெற்றனர். மற்றும் மற்போர், விற்போர், வாட்போர் இவற்றையெல்லாம் விளையாட் டாகவே பழகி வந்தனர். தேர்களையும், வண்டிகளையும் பந்தயத்தில் ஒடவிட்டு மகிழ்ந்தனர். இது தவிர கோழி, தகர், யானை, பூவை, குதிரை, சிவல், கிளி முதலியவற்றை ஒன்ருேடொன்று சண்டை செய்ய விட்டும், ஓடவிட்டும் வேடிக்கைப் பார்ப்பது மரபு என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. ஆனல் தமிழ் வீரர்களுக்கு மனிதர்களை விலங்கு களுக்கு இரையாக்கி மகிழும் வெறி என்றுமே இருந்த தமிழ் மக்களது வாழ்க்கையின் எல்லாத் துறை களுக்குமே இசையும், இசைக் கருவிகளும் பின்னணிச் சங்கீதமாக அமைந்திருந்தன. எனவே மற்ற விளை யாட்டுப் போர்களைப் போலவே, இசைப்போர், யாழ்ப் போர் இவையும் நிகழ்ந்தன. நாடகங்கள், பாவைக் கூத்துக்கள் முதலியன திருவிழாக் காலங்களில் சிறப் பாக நடத்தப்பெற்றன. மேலும் விழாக்களில் ஆட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/58&oldid=739295" இலிருந்து மீள்விக்கப்பட்டது