பக்கம்:அறிவியற் சோலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ഇ=്ജ இலிங்கனுடைய வாதங்களோ நிதியிலே தோய்ந்தி ருந்தன ; நேர்மையைச் சேர்ந்திருந்தன. அவரு டைய கருத்துக்கள் ஆணித்தரமாகவும் அழகாகவும் விளங்கின. அவர் தம் பேச்சுக்கள் அவரது உள்ளத் தின் எதிரொலியாய்த் தோற்றின. 'பிளவுபட்ட குடும்பம் நெடுநாள் நிலைக்க முடியாது. அதுபோல சிலர் உரிமையுடனும் சிலர் அடிமையுடனும் வாழும் நாடு நெடுநாள் வாழமுடியாது' என இலிங்கன் முழங்கினர். "அடிமைகளை ஆள்வதும், விற்பதும் மக்களின் தனி உரிமை' இது எதிரியின் வாதம். 'ஒருவனை ஒருவன் அடக்கி ஆள முடியாது; ஆளக் கூடாது; அடிமை ஓர் சாபக்கேடு. அதனைப் பூண்டோடு அழித்தாக வேண்டும். அதன் ஆணி வேரினைப் பொசுக்க வேண்டும்'. இது இலிங்கனின் வீர முழக்கம். வாதிடும்போது இலிங்கனின் இரு பெருங் கண்களும் பேரொளி விட்டுப் பிரகாசித்தன. அவரது தோற்றம் ஓர் ஏற்றம் பெற்று விளங்கியது. ஆல்ை இறுதியில் இலிங்கன் பெற்றது வெற்றி யன்று. எனினும் இலிங்கன் இழந்தது ஒன்றுமில்லை. தேர்தலில் தோற்ற போதிலும், இலிங்கன் தோலா நாவீறு படைத்த மேலோன் ; மனித குலத்தின் மாணிக்கம்; நீக்ரோக்களின் அடிமை விலங்கு ஒடிக்கவந்த விடுதலை வீரன் என்பது நாடு முழு வதும், பட்டி தொட்டிகளிலும் காட்டுத்தீப் போலப் பரவலாயிற்று. அமெரிக்காவின் நாணு பக்கங்களி லிருந்தும் பேச இலிங்கனுக்கு அழைப்புக்கள் விரைந்து வரலாயின. நியூயார்க்கில் 1860இல் கூப்பர் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/79&oldid=739318" இலிருந்து மீள்விக்கப்பட்டது