பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
145

celulose acetates : (வேதி ;குழை) செல்லுலோஸ் அசிட்டேட் : இது சூட்டால் நிலையாக இறுகிவிடும் தன்மையுடைய ஒரு பிளாஸ்டிக் பொருள். வலிமையும், உரப்பும் இதன் சிறப்பியல்புகள். பல்வேறு வண்ணங்களில் இது கிடைக்கிறது. உந்துகலத்தின் இயக்குச் சக்கரங்கள், அலங்காரப் பொருள்கள், ஊற்றுப் பேனாக்கள், மின் கருவிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது. இது மென்மையான உலோகங்களைப் போலவே செயற்படுகிறது

cellulose acetate butyrate : (வேதி;குழை ) செல்லுலோஸ் அசிட்டேட் பூட்டைரேட்டு : செல்லுலோஸ் அசிட்டேட் தயாரிக்கும் அதே செய்முறைப்படி பூட்டைரிக் அமிலத்தையும், அசிட்டிக் அமிலத்தையும், நீர் நீக்கப்பட்ட காடிகளுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகைப் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும்பொருள்கள் ஈரத்தைக் குறைவாக ஈர்க்கிறது செல்லுலோஸ் அசிட்டேட்டால் செய்த பொருள்களைவிட அதிகமாக வெப்பத்தைத்தாங்கும் திறன் வாய்ந்தவை. கைப்பிடிகள், பெட்டிகள் முதலியன செய்வதற்கான வார்ப்படக் கலவைப் பொருளாகப் பயன்படுகிறது

cellulose nitrate :(வேதி;குழை.) செல்லுலோஸ் நைட்ரேட் : மிகப் பழமையான பிளாஸ்டிக்குகளில் ஒன்று. செல்லுலாயிடு, பைர்லின், அமரித் போன்ற பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மெருகெண்ணெய்கள்; பசைக் குழம்புகள், சலாகைகள், குழாய்கள், தகடுகள் வடிவில் கிடைக்கும். இது பல்வேறு வண்ணங்களில் பயன்படுகிறது

cellulosic : (குழை.) மரக்கூற்றுத் தன்மையுடையது : இது வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பிளாஸ்டிக் குடும்பத்தைக் குறிக்கிறது. செல்லுலோஸ் அசிட்டேட் போன்ற பழக்கமான பிளாஸ்டிக்குகள் இந்த வகையைச் சேர்ந்தவை. சிப்பங்கள் கட்டும் பொருளாகப் பெருமளவில் பயன்படுகிறது. தோல் சிப்பங்கட்டுதல், கைவினைக் காகித மேலுறைகள். வார்ப்படக் கொள்கலங்கள் முதலியன தயாரிக்கப் பெருமளவில் பயன்படுகிறது

cell vent : (மின்.) மின்கலப்புழை : மின்கலத்திலுள்ள ஒரு புழைவாய். இது மின்கலத்தில் உண்டாகும் வாயுக்கள் வெளிச் செல்வதற்கு இடமளிக்கிறது

celotex : செலோடெக்ஸ் : கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை இழைம அட்டையின் வாணிகப்பெயர். சுவர் மறைப்பு, மின்காப்பு முதலியவற்றுக்குப் பயன்படுகிறது

celsius scale : செல்சியஸ் அளவை : இது சென்டிகிரேடு அளவையாகும். நூற்றளவையாகப் பகுக்கப் பட்ட நூற்றியல் வெப்பமானியைக் கண்டுபிடித்த ஆண்டர்ஸ் செல்சியஸ் (1701-44) என்பவரின் பெயரில் அழைக்கப்படுகிறது

cement : சிமென்ட் : பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென் பதமாகப் பயன்படுத்தப்படும் சாந்துப் பொருள். தமிழ் வழக்காகச் "சிமிட்டி" எனவும் அழைக்கப்படுகிறது

cementation steel : (உலோ.) படிக எஃகு : படிக உலையில் தயாரிக்கப்படும் ஒரு வகை எஃகு வெட்டுக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதைத் தயாரிக்கச் செலவு அதிகம் பிடிப்பதால் இது மிகக் குறைந்த அளவிலயே பயன்படுத்தப்படுகிறது

cemented carbide tools (எந்.) ஒட்டு கார்பைடுக் கருவிகள் :