பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

225

direct polarity : (பற்.) நேர்துருவமுனைப்பு : நேர் முனையிலிருந்து (அடிப்படை உலோகம்) எதிர் முனைக்கு (மின்முனை) மின்னோட்டம் நேரடியாகப் பாய்தல். மின்முனை எதிர்முனையாகவும், அடிப்படை உலோகம் நேர் முனையாகவும் செயற்படுகிறது

dirigible: (வானூ.) பறவைக் கப்பல்: வானில் வழிப்படுத்திச் செலுத்தப்படக்கூடிய ஒரு வகைக் கூண்டு

discharge header : (வானூ.) வெளியேற்று குழாய் : உந்துகலம், விமானம் முதலியவற்றின் மீவிசைக் காற்றடைப்புக் குழாயிலிருந்து எஞ்சினுக்குக் கர்ற்று கொண்டு செல்லப்படும் குழாய் வழி

dirty proof : (அச்சு.) மட்டமான பார்வைப் படி : பல பிழைகளைக் கொண்ட திருத்தத்திற்கான அச்சுப் பார்வைப் படி

discriminator : (மின்.) பிரித்துணர் கருவி : ஒருவகைப் பண்பலை உணர்கருவி

discharging or relieving arch : வெளியேற்று அல்லது தளர்த்து கவான் : வாயில்-பலகணி ஆகியவற்றின் மேற்கட்டையின் பாரத்தைத் தளர்த்துவதற்காக ஒரு கதவில் அல்லது பலகணியிலுள்ள திறப்புக்கு மேல் அமைக்கப்படும் கவான்

discoloration : (குழை.) நிறம்வேறாக்குதல் : பிளாஸ்டிக் பொருள் முதலில் கொண்டிருக்கும் நிறத்தை மாற்றுதல்

disconnect : இணைப்பு நீக்கு : இணைப்பைப் பிரித்துவிடுதல்; கழற்றிவிடுதல்; பிரித்து வேறாக்குதல்

disengaging clutch : (எந்.) விடுவிப்பு ஊடிணைப்பி : சக்கரங்களை பல்லிணையின் தொடர்பிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒர் ஊடிணைப்பி

dished : உட்குழிவு : சீட்டாட்ட மேசைகளின் மேற்பரப்பில் பணம் போட்டு வைப்பதற்காக உட்குழிவாக அமைக்கப்படும் பள்ளம்

dished wheel: (தானி; எந்.) உட்குழிவுச் சக்கரம் : உட்குழிவாக அல்லது குவியாக அமைக்கப்படும் ஒரு சக்கரம்

disinfectant : (வேதி.) தொற்றுத்தடை மருந்து : நச்சுத்தடைக் காப்புப் பொருளாகப் பயன்படும் வாயு திரவம் அல்லது திடப் பொருள்

disinfection: (வேதி.) தொற்றுத் தடைக்காப்பு : தொற்றுத் தடைப் பொருட்களாகிய வாயு அல்லது திரவத்தைப் பயன்படுத்தித் தொற்று நோய்களுக்கு எதிராகத் தடைக்காப்புச் செய்தல்

disintegration : சிதைவுறுதல்: பாறைகள் முதலியவை சிதைவுற்று ஆக்கக் கூறுகளாகப் பிரிதல்

disk : (பட்.) வட்டத் தகட்டு : ஒரு பட்டறையிலுள்ள வட்டத் தகடு. இது ஓர் எந்திரத்தின் அல்லது வேலைப்பாட்டின் ஒரு பகுதியாக இல்லாதிருக்கலாம்

disk clutch : (தானி; எந்.) வட்டத் தகட்டு ஊடிணைப்பி : இது ஒற்றையாகவும், பல்லுறுப்புகளாவும் அமைந்திருக்கும். இதில் ஒரு வட்டத்தகடு ஒரு தகட்டுப்பாளத்திற்கு நேராக விற்சுருள் மூலம் மடித்து வைக்கப்படுகிறது. இதனால் ஊடிணைப்பி மூலம் விசையை அனுப்பும்போது, உறிஞ்சப்படுவதில்லை. ஊடிணைப்பிக்கால்மிதிகள் மூலம் ஊடிணைப்பிகளை இணைக்கலாம் அல்லது பிரிக்கலாம்